Bigboss – வெளியே சென்ற சென்றாயன், கதறி அழுத்த ஐஸ்வர்யா, கழுவி ஊற்றப்பட்ட கமல்

0
128

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று கமல் அவர் காப்பாற்றப்படுவதாக அறிவித்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது என்னவோ ஐஸ்வர்யாவின் வெளியேற்றம் ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் காப்பாற்றப்பட்டு கொண்டே இருப்பது கமல் மீதும் பிக் பாஸ் மீதும் ஒரு வித நம்பிக்கையின்மையை மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி விட்டு இருக்கிறது அதற்கும் மேலாக சென்றாயனின் வெளியேற்றம் நிச்சயமாக யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒன்று பார்வையாளர்களின் கோபத்தைச் சமாளிக்க தாமே முந்திக் கொண்டு ‘என்னாத்த ஓட்டுப் போட்டீங்க?” என்று பார்வையாளர்களின் பக்கம் பந்தைத் திருப்பி ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதால் தனக்கும் அதிருப்தியும் கோபமும் இருப்பது போன்ற ஒரு பாவனையை கமல் சிறப்பாகச் செய்து முடித்து விட்டார் கமல்.

உலகநாயகனுக்கு இதெல்லாம் சொல்லவா வேண்டும் ஆனால் இணையத்தில் கமலை ஆளாளுக்கு கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர் ஒரு வீட்டினயே சரியாக நேர்மையாக கவனிக்க முடியாத உங்களிடம் ஒரு நாட்டை எப்படி நம்பி தருவது என்பது போன்ற கேள்வி கணைகள் கோப கணைகள் போன்று கமலை நோக்கி வருகின்றன இதை எல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் கமல் என்பதை போக போக தெரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here