Bigg Boss – வெளியேறிய மும்தாஜ்?? கடைசி நிமிட பரபரப்பு.

0
496
Mumtaz evicted in Bigg Boss Tamil

சென்ற வாரம் ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று நினைத்தால் அதிர்ச்சியாக சென்றவனை வெளியேற்றி ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானது நிகழ்ச்சி தரப்பு. இதனால் தற்போது நியாயமாக நடந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நிலையில் மும்தாஜ் வீட்டை விட்டு வெளியேறுவதாக இணையங்களில் செய்தி காட்டு தீயை போல பரவியது.

இந்நிலையில் தொலைக்காட்சியோ ஒரு ப்ரோமோவை ஒளிபரப்பி வெளியேறிய போட்டியாளர்கள் என்று பற்றவைத்தது. ப்ரோமோவோ கடந்த சீசன் இல் வெளியேறிய போட்டியாளர்களை பற்றி குறிப்பிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியது.

இதற்காக நிகழ்ச்சி தரப்பில் விசாரித்த பொழுது இந்த தடவையும் ஐஸ்வர்யா எஸ்கேப் என்று சொல்லப்படுகிறது. ஏன் ஐஸ்வர்யா மட்டும் ஒவ்வொரு முறையும் காப்பாற்ற படுகிறார் என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழும்பாமல் இல்லை. மேலும் இன்றைக்கு மும்தாஜ் வெளியேறி பிறகு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்பொழுது ஐஸ்வர்யா எஸ்கேப் என்றால் மாட்டிக்கொள்வது மும்தாஜ் ஆக தான் இருக்க கூடும் என்பது நிச்சயம் ஆக தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் “வெறுப்பின் உச்சம்” ஆக இருக்கும் ஐஸ்வர்யாவை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி,   “உச்சம் தொடும் அன்பின் மொழியாக” பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சென்ட்ராயன், மும்தாஜ் போன்றவர்களை ஏன் வெளியேற்றுகிறார்கள் என்ற விவாதம் இணையத்தில் இப்பொழுதே பரபரப்பை உண்டு பண்ணி கொண்டு இருக்கிறது

இதனால் மேலும் மேலும் பதற்றமடைந்த ரசிகப்பெருமக்கள் இதற்கான விடையை அறிந்து கொள்ள நிகழ்ச்சியை இன்று எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here