இந்த வாரமாவது ஐஸ்வர்யா எலிமினேஷன் ?? : An Exclusive Insider Report

0
431
Bigg Boss eviction

ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யாவின் எலிமினேஷனை எதிர்பார்த்து கொண்டிருக்கும் கூட்டம் ஒரு பக்கம்; அதே போல் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் சிலர் என ஒரு கூட்டம்; கடந்த சீசன் போல் ஓவியா ஜூலி மீது இருந்த அபிப்ராயம் போல பெரும்பாலானோர் கருத்துக்கள் இந்த சீனில் இல்லை ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி ரித்விகா என்று ஒவ்வொருவர் Likes and Dislikes மேலும் பரவலாக இருக்கிறது.

காலையில் வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். யாஷிகாவோ  உங்களை விட பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்து அதிக போட்டிகள் செய்தது நான் தான். பிக்பாஸ் பட்டம் பெற நான் தகுதியானவள் என்று கூறுகிறார்.

இந்த நேரத்தில் விஜியின் கணவர் பெரோஸ் டுவிட்டரில் ஒரு வீடியோ ஷேர் செய்துள்ளார். அதில் விஜியின் கண்ணில் ஐஸ்வர்யா ஸ்ப்ரே அடிக்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த காட்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை என்பது அவரின் கோபம் மற்றும் தன மனைவியே ஜெயிக்க தகுதியானவன் என்றும் தெரிவிப்பதாக சொல்கிறார். இப்படி எல்லாருமே ஜெயிக்க தகுதியானவர்கள் என்றால் இதனால் யார் தான் எலிமினேஷன் ஆக போகிறார்கள் என்று ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொள்கின்றனர்.

இதை பற்றி நாம் சம்மந்தப்பட்ட தரப்பில் வழக்கம் போல் மூக்கை நுழைத்ததில் தெரிய வந்தது பாலாஜி தான் வெளியே போக போகிறார் என்பது தான்!!

ஒரு சிரத்தையும் இல்லாமல் விளையாட்டையே விளையாட்டாக விளையாடும் ஆர்வமே இல்லாத பாலாஜி தான் அடுத்த எலிமினேஷன் என சொல்லப்படுகிறது. டிஆர்பி எகிறும் காரணிகள் ஆன விஜி யாஷிகா ஐஸ்வர்யா இவர்களில் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி விட்டால் கல்லா கட்ட முடியாது என்று தெரிந்தே இப்படி ஒரு முயற்சி எனவும் சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பாப்போம்!!!

WHO WOULD YOU LIKE TO SAVE THIS WEEK ON BIGG BOSS TAMIL SEASON 2 (Unofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here