மீன்கடை போல் சண்டை போடும் போட்டியாளர்கள்: கமலின் அறிவுரை; பிக்பாஸ்ஸின் தண்டனை காத்திருக்கும் ரசிகர்கள்

0
145
Bigg Boss Tamil

சர்ச்சையும் அதிரடியாய் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர சண்டையும் சர்ச்சையுமாய் இருந்து வருகிறது. இந்த வாரம் (நேற்றை தவிர)  நிகழ்ச்சியில் பெண்கள் ஒருவருக்கொருவர் சந்தை கடை போல் சண்டையிட்டு இடத்தையே களேபரமாகினர்.

போதாக்குறைக்கு ஐஸ்வர்யா வேறு நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். இதே போல் யாஷிகாவும் விஜியை தாக்கி காயம் ஏற்பட செய்து அவரை விளையாட விடாமல் செய்தார் அதே போல் ரித்விகாவையும் சும்மா விட வில்லை.

இப்படியே ஒருவருக்கொருவர் பொறாமை குணத்துடன் சண்டையிட்டு கொள்வது தொடர்ந்து அரங்கேறி வருகிறது போட்டியை வெல்லும் நோக்கத்தை விட பொறாமை குணமும் வன்மமும் அதிகமாக நிகழ்ச்சியில் தெரிகிறது. இது இயல்பாக நிகழும் ஒன்றை அல்லது டிஆர்பி காக செய்யப்படும் விதையை என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இந்த மோசமான செயல்களுக்கு பிக் பாஸ் எப்படி போட்டியாளர்களுக்கு தண்டனை தர போகிறார், கமல் எப்படி அதை கையாள போகிறார்  என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here