வெளியேறிய யாஷிகா, மீண்டும் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா : பிக் பாஸின் மாஸ்டர் பிளான் என்ன ??

0
152
Yashika aanand Evicted

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது நிறைவுக்கு வரவுள்ளது.  இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன். பாலாஜி வெளியேறிவிட்டார். மேலும் அடுத்த எவிக்ஷன் யாஷிகா தான் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.

நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி பாலாஜி நேற்று வெளியேற்ற பட்டார். மற்றொரு வெளியேற்றப்பட வேண்டிய நபர் யாஷிகவே தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஐஸ்வர்யாவை சத்தியமாக வெளியேற்றமாட்டார்கள் இதை அனைவரும் ஒப்புக்கொள்வார். அவர் இல்லை என்றால் மீதம் உள்ள நாட்களை பரபரப்பாக நகர்த்த முடியாது.

அதே போல் தான் ரித்விகாவும். தமிழ் பெண் என்ற அடையாளப்படுத்தி ரசிகர்களின் உணர்வுகளை மேலெழுப்பி கல்லா கட்ட அவரும் தேவைப்படுவார். ஜனனி ஒப்புக்கு சப்பாக தேவை படுபவர். அதனால் தான் யாஷிகா இந்த வார பலிகடா. அதை முன்னிட்டு தான் அவருக்கு முன்னரே 5 லட்சம் பரிசளிக்கப்பட்டது.

இப்படி புத்திசாலித்தனமாக செயல்படும் விஜய் டீவி மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருப்பதும் சற்று நெருடலான ஒன்று தான். அதை சமாளிக்க கமலை வைத்து இன்று சப்பை கட்டு கட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here