இத்தனை முறை படம் பார்த்தால் ரசிகர்களுடன் “அதற்கு” தயார் – நடிகை ராஷ்மி சவால்

0

நடிகை ராஷ்மி கெளதம் கண்டேன் என்ற படத்தின் மூலம் சாந்தனுவிற்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொகுப்பாளராக இருந்து நடிகை ஆன இவர் பின்னர் தமிழில் சரி வர வாய்ப்பு கிடைக்காதமையால் தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு பெரிய புகழ் பெற்று கொடுத்த படம் குண்டூர் டால்கிஸ்.

அது வரை அடக்கி வாசித்து நடித்து இருந்தவர் இப்படத்தில் தாராள கவர்ச்சிமயத்தை காட்டி பல கிளுகிளுப்பான காட்சிகள் (முத்தக்காட்சிகள் உட்பட!) நடித்து ரசிகர்களை கிறங்கடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். நடுவில் லொள்ளு சபா புகழ் ஜீவாவுடன் மாப்பிள்ளை விநாயகர் என்ற படத்தில் நடித்து இருந்தாலும் அப்படம் பல காரணங்களால் வெளிவராமல் இருக்கிறது.

தமிழில் நல்லதொரு வாய்ப்பு அமையாவிட்டாலும் தெலுங்கில் பட்டைய கிளப்பி கொண்டிருப்பவர் புதியதொரு சர்ச்சையான சவால் ஒன்றை போட்டுள்ளார். தனது அடுத்த தெலுங்கு படமான நெக்ஸ்ட் நுவ்வே (அடுத்தது நீதான்) என்ற படத்தின் ப்ரோமோஷனை குறிவைத்து அவர் போட்ட சவால் இது வரை இந்தியாவிலே யாரும் போடாதது எனவும் சொல்லலாம்.

இந்த படத்தை 5000 முறை பார்ப்பர்வர்கள் தன்னை ஒரு நாள் முழுவதும் டேட் செய்யலாம் என்று பகிரங்கமாக கூறி இருக்கிறார். இவரின் இந்த செயல் பலர் மனதில் கிளுகிளுப்பை ஓடினாலும் வழக்கம் போல் கண்டங்களும் எதிர்ப்புகளும் வர தொடங்கி எதிர்பார்த்த ப்ரோமோஷன் படத்திற்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

ஒரு டிக்கெட் விலை Rs.100, 5000 முறை பார்த்தால் என்றால் அவருடன் ஒரு நாள் பொழுதுபோக்க Rs. 50000 என்று இப்பொழுதே கணக்கு போட ஆரம்பித்துள்ளனர். பலர் வயித்தில் நெருப்பை எரிய விட்டிருந்தாலும் இதன் மூலம் படக்குழு குளிர்காய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

விஷயம் தெரிந்த சிலரோ, எப்படியும் யாரும் அவ்வளவு முறை ஒரு படத்தை பார்க்க மாட்டார்கள், அப்படியே பார்த்தாலும் சும்மா ரேஷ்மியுடன் டின்னெர் சாப்பிட்டு விட்டு Selfie எடுக்க வைத்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.. எல்லாம் ப்ரோமோஷனுக்கு பண்ணும் வேலை….

அட போங்கய்யா!!!!! என்று சலித்து பெருமூச்சு விடுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here