இந்த சூப்பர்ஸ்டாருக்கு Right Hand ஆன விஜய்சேதுபதி

0
Vijay Sethupathi in Sye Raa narasimha reddy

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

மிக சுமாரான படங்களை கூட தன் அனாவசியமான நடிப்பால் மக்களை கவர்ந்து படத்தை காப்பாற்றி வருகிறார்.

இருப்பினும் மற்ற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தாத இவர் முன்னர் ஒரே ஒரு கன்னட படம் ஒன்றில் வில்லன் வேடம் ஏற்று நடித்து இருந்தார்.

தமிழில் பின்பு பிரபலமானதை தொடர்ந்து மற்ற மொழிகளில் படம் பண்ண நேரமில்லாத காரணத்தால் தமிழ் சினிமா வரையிலே தன் வட்டத்தை வரையறுத்தி கொண்டார்.

இப்பொழுது அதற்கு சொல்லி வைத்தார் போல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது.

சிரஞ்சீவியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு சரித்திர பின்னணியில் “சை ரா நரசிம்ம ரெட்டி” என்ற படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் தயாராகி வருகிறது.

அமிதாப் பச்சன், த்ரிஷா போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

சிரஞ்சீவின் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தின் வலது கரமாக “ஒப்பாயா” என்ற திரைக்கதைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் நடிக்க உள்ளார்.

அவருக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவராக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை போல மற்ற மொழி ரசிகர்களையும் குறிப்பாக தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்வார் என்றே சொல்லப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here