என்ன ஆச்சு தமிழ் திரையுலகத்திற்கு?? காலா ரிலீஸ் தள்ளி போகுமா ??

0
Theaters shut down

2018 – மிகவும் மோசமான ஆண்டாக தான் தமிழ் திரையுலகத்திற்கு அமைந்துள்ளது. ரிலீஸ் ஆன எந்த படமும் போதிய வரவேற்பும் பெறவில்லை வணிகமும் செய்யவில்லை.

இந்த வருடம் ரிலீஸ் ஆன பெரும்பாலும் படங்களே, சுமாரான வசூல் செய்து வருகின்ற நிலையில், கோடை விடுமுறையை தமிழ் திரையுலகமும் தியேட்டர் உரிமையாளர்களும் மிகவும் நம்பி இருந்தனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளான காலா படமும் பின் அடுத்தடுத்து வணிகத்தை குறி வைத்து சில படங்களை ரிலீஸ் செய்ய நினைத்து Kollywood தயார் ஆன நிலையில், தியேட்டர் ஸ்ட்ரைக் அறிவிப்பு அதிர்வலைகளை கிளப்பியது நிஜம்.

பல கோடி செலவு செய்யும் தியேட்டர் அதிபர்கள் உடன் டிஜிட்டல் நிறுவனங்கள் சரியான ஒப்பந்தங்களை போடாததால் பலனாக தயாரிப்பாளர்களின் மீது கட்டண சுமை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.இதை குறைக்க அவர்கள் முறையீடு செய்து இருந்த நிலையில் தியேட்டர் அதிபர்களோ மார்ச் 16-ம் தேதி முதல் படங்களை திரையிடுவதற்கு நிறுத்தி வைத்து இருக்கின்றனர்.

இதன் விளைவாக தயாரிப்பாளர் சங்கமோ, அனைத்து பட தயாரிப்பு பணிகளையும் நிறுத்த சொல்லி நிர்பந்தித்து இருக்கின்றன.

இதனால் மார்ச் இறுதி திரைக்கு வர இருக்கும் படங்களும் காலா படமும் தாமதம் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பணிகள் இன்னும் பாக்கி இருக்கும் நிலையில் சொன்ன தேதியில் காலா ரிலீஸ் ஆவது சற்று கடினம் தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளவர்கள் என பேசிக்கொள்ளப்படுகிறது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here