ஒரு வழியாக திருமணம் செய்துகொள்ளும் நமிதா

0

சினிமாவில் கதாநாயகர்கள் மட்டுமே திருமணம் ஆன பின்பும் நடிப்பார்கள், கொடி கட்டி பறப்பார்கள், கோடியில் குவிப்பார்கள்.

நடிகைகள் எல்லாம் திருமணம் என்ற பேச்சு வந்தாலே மார்க்கெட் போய் விடும் நிலை தான்.

இதனாலே பல நடிகைகள் தங்கள் வயதை மறைத்தும், திருமணத்தை தள்ளி போட்டும் முடிந்த வரை சினிமாவில் தாங்கள் அடையும் உயரத்தை நோக்கி பறந்து கொண்டு, பணம் சம்பாதித்து செட்டில் ஆக நினைக்கின்றனர்.

பின்னர் யாரேனும் ஒரு தொழிலதிபரை மணந்து திருமண வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர்.

namithaஇது அன்றைய ஸ்ரீதேவியை தொடங்கி இன்றைய அசின் வரை அனைவருக்கும் பொருந்தும்.

மிக சிலரே மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதும் தாங்கள் காதலித்தவரை கை பிடித்து, மண வாழ்க்கையை அமைத்த பின்னரும் சினிமாவில் கோலோச்சுகின்றனர்.

அந்த வழியில் ஜோதிகாவின் வழியை தற்போது நடிகை சமந்தாவும் பின்பற்ற இருக்கிறார்.

இநேரத்தில் ஏழு, எட்டு வருடங்கள், முன் இளசுகள் முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை ஜொள்ளு விடும் அளவிற்கு கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை நமிதாவிற்கு திருமணமாம்!!!

சில வருடங்கள் முன்பு வரை இளைஞர்கள் அனைவரும் நமிதாவின் வளைவுகளுக்கும் , அவரின் ஆசையான மச்சான்ஸ் என்ற குரலுக்கும் அடிமையாகவும் இருந்தது என்னமோ உண்மை தான்!!

அவர் ஓவராக குண்டடித்து இருந்த போதும் அவர் மீது பித்து பிடித்து அலையும் அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

அதுவே அவரை அரசியல் பிரச்சாரம், கடை திறப்பு, விளம்பரம் என பல்வேறு தளங்களில் இயங்க ஊன்றுகோலாக அமைந்தது.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து மார்க்கெட் இழந்தவர் பிக் பாஸ் மூலம் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு அதையும் வீணடித்தார்.

ஒருவழியாக இதோ அதோ என்று இருந்தவர் அவரின் நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிக் பாஸில் ரைசாவை தவிர எந்த ஒருவருடனும் ஒட்டாத இவர் ரைசா மூலமே அந்த அறிவிப்பை வீடியோ மூலம் உறுதி படுத்தினார்.

“எல்லாருக்கும் வணக்கம்!! வரும் நவம்பர் 24அன்று நானும் வீர்- ம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் அன்பும் பெற எங்களை வாழ்த்தும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி மச்சான்ஸ்!!!”

இவ்வாறு கூறி இருக்கிறார்.

நடுத்தர வாலிபர்களை அதிகம் ஈர்த்த நமீதா திருமணம் செய்து கொள்ள போகும் செய்தி அனைவரிடமும் வேகமாக பரவி வருகிறது.

இன்று போல் என்றும் வாழ்க என கூறி நாமும் அவரை வாழ்த்துவோமாக!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here