கமல் நடிகர், ஆனால் ரஜினி தான் தலைவர்: போட்டு உடைக்கும் கமல் அண்ணன் சாருஹாசன்

0
Charu Haasan on Kamal and Rajini

நடிகர் சாரு ஹாசன் கமல் ஹாசனின் உடன் பிறந்த சகோதரர் அவரின் மூத்த அண்ணண் வக்கீலுக்கு படித்து இருந்தாலும் சினிமா ஆசை இவருக்கும் வர, பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பெரும்பான்மை மொழிகளில் நடித்த இவர் ஒரு முறை தேசிய விருது கூட வாங்கி இருக்கிறார்.

இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

பாரதி ராஜாவின் வேதம் புதிது, மணிரத்னம் இயக்கிய சூப்பர்ஸ்டாரின் தளபதி போன்ற படங்களில் பெரிதும் பேசப்பட்டார். தற்போது தாதா என்ற தமிழ் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வரும் இவர் சமீபத்திய பேட்டியில் தனது தம்பி கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசங்களை பற்றி மனம் திறந்து உள்ளார்.
அவர் கூறியதாவது,

சிவாஜி நன்றாக நடிப்பார். அவர் நடிக்கட்டும்ய்யா. நமக்கு அண்ணன் எம்ஜிஆர்தான் என்று நாங்கள் சொல்வோம். அன்று பலருடைய மனநிலையும் இதுதான். அதே நிலைமைதான் இன்று ரஜினிக்கும் கமலுக்கும் உள்ளது. கமல் நன்றாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர். ஆனால் ரஜினிக்குதான் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்தான் தலைவர். கமலுக்கு நிறைய ரசிகைகள் உண்டு. கமலை பெண்கள் ரசிப்பதால் கோபப்படுபவர்களும் அதிகம் உண்டு. ரஜினியை காதலிக்கிறேன் என யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் மக்களை கவரும் காந்தம் கவர்ச்சி ரஜினியிடம் உள்ளது.ரஜினி கட்சி துவங்கமாட்டார். அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பார். கமலை விட நண்பர் ரஜினி எனக்கு நெருக்கமானவர். ரஜினியை விமர்சித்தால் வாக்குகள் சிதறும். அதனால்தான் எந்த அமைச்சரும் ரஜினியைத்தான் விமர்சிக்க மாட்டார்கள்.” என்றார்.

கமலும் ரஜினியும் தமிழக அரசியலில் கால் வைக்க முனைப்புடன் இருக்கும் இந்நிலையில் கமலின் அண்ணனே ரஜினியை ஆதரிப்பது பலரது புருவங்களையும் உயர்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here