கல்யாணத்திற்கு பிறகு டைவர்ஸ் வேண்டாம், நட்பே போதும் : டிவி நிகழ்ச்சியில் ஆர்யா உருக்கம்

0

நடிகர் ஆர்யா சினிமாவை தாண்டி தற்போது சின்னத்திரைக்கும் வந்துவிட்டார். “எங்க விட்டு மாப்பிளை” என்ற பெயரில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை ஒரு ஷோவாக நடத்துகின்றனர்.

ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல போட்டியாளர்கள் முயன்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பலர் கருத்துக்களும் கண்டனங்களும் குறிப்பாக மாதர் சங்கமும் மத சங்கங்களும் புகார் அளித்ததை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்து வந்தது.இதில் தேர்வு செய்யுதுகொள்ளும் ஒருவரை தான் ஆர்யா நிச்சயம் திருமணம் செய்து கொள்ள போறாரா என்ற ஆவலில் தான் அதிகம் பேர் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.
அதில் முக்கியமானவராக கருதப்பட்ட தேவசூர்யாவை எலிமினேட் செய்வதாக ஆர்யா நேற்று அவரிடமே நேரடியாக அழைத்து கூறினார்.

“கல்யாணம் செய்தால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கவேண்டும். பின்னர் பிடிக்கவில்லை என டைவர்ஸ் செய்வது எனக்கு வேண்டாம். நாம் நட்போடு இருப்பது ஓகே !! ஆனால் லைப் பார்ட்னராக இருப்பது கஷ்டம் என எனக்கு தோன்றுகிறது”
என உருக்கமாக கூறி போட்டியாளர் தேவசூர்யாவை நிகழ்ச்சியில் இருந்து அனுப்பிவைத்தார்.

ஆர்யா இந்த நிகழிச்சியில் ஒருவரை கல்யாணம் செய்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி அவருக்கு பிரச்னை இல்லை. ஆனால் இதில் பங்கேற்ற மற்ற பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்று மக்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here