காலாக்கு பிறகும் ரஞ்சித்துடன் இணையும் சூப்பர்ஸ்டார்: மகிழ்ச்சியில் தனுஷ்

0
Rajini and Dhanush impressed with Ranjith

2.0 படத்தின் ரிலீஸ், பல்வேறு களேபரங்களுக்கு பிறகு ஒரு வழியாக ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

அப்படத்திற்கு பிறகே காலா படம் வெளியிடப்படும் என்று சூப்பர்ஸ்டார் உறுதிபட தெரிவித்த பிறகு காலா ரிலீஸும் ஆகஸ்டில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காலா படப்பிடிப்பு முன்னரே முடிவடைந்ததால், தற்போது டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எடுத்த வரையில் படத்தின் ரஷ் ஐ தயாரிப்பாளரான தனுஷுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

காலாவை பார்த்து மிக சந்தோஷத்தில் தனுஷ் இருந்ததாகவும், அவருக்கு மிகவும் பிடித்து இருந்ததாக தெரிகிறது.

அதற்கு பரிசாக, இயக்குனர் ரஞ்சித்துக்கு தனுஷ் BMW காரை பரிசளித்து இருக்கிறார். இப்பொழுது ரஞ்சித் அந்த காரில் தான் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ரஞ்சித்துடன், ரஜினி மிக இணக்கமான நட்பை மீண்டும் காலாவில் பெற்று இருக்கிறார்.

எப்பொழுதும் தன்னுடைய மிக முக்கியமான நண்பர்களிடையே மட்டும் சினிமா, அரசியல் பற்றி விவாதிக்கும் ரஜினி, காலா படப்பிடிப்பில் ரஞ்சித்துடனும் அரசியல் பற்றி விவாதித்து இருக்கிறாராம்,

ரஜினி, அரசியலில் களம் இறங்குவதற்கு முன் ரஞ்சித், சமுத்திரக்கனி போன்ற துடிப்பானவர்களுடன் கலந்து விவாதிப்பதன் மூலம் தேவையானவற்றை தெரிந்து கொண்டு வருகிறார்.

இதன் மூலம் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தை பெற்ற ரஞ்சித்திடமே அடுத்த படத்திற்கும் கதை சொல்லும் படி கேட்டு இருக்கிறாராம் சூப்பர்ஸ்டார்.

சூப்பர்ஸ்டாரை வைத்து ஒரு படம் பண்ணுவதே சாதனை என்று இருக்கும் பொழுது வரிசையாக மூன்றாவது படமும் ரஞ்சித்துக்கே வாய்ப்பு கொடுக்க என்னும் ரஜினியின் எண்ணம் இது தான் :

ஜனரஞ்சகமான படம்; புரட்சிகரமான கருத்துக்கள்; ஆறு மாத படப்பிடிப்பு; என்ற ரஞ்சித்தின் Working style மிகவும் பிடித்து போனது மட்டும் இல்லாமல் அதை வணிகம் செய்யும் அவரின் திறமையையும் நம்பியே மூன்றாவது முறையும் கதை கேட்டு இருக்கிறார் என்று ரஜினியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

எந்திரன், கோச்சடையான், 2.0 போன்ற வழக்கத்திற்கு மாறான படங்கள் தந்த ரஜினி மீண்டும் ஜனங்களை கவரும் வகையில் சமூக நலன் சார்ந்த கதைகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் அரசியலில் என்ட்ரி தரலாம் என்பது அவரின் எண்ணம் ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here