சிக்கலில் தவிக்கும் ஸ்ரீதேவி குடும்பம், உதவ முன் வந்த “தல” அஜித் உண்மை என்ன??

0
Ajith helps sridevi's family

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பல காரணங்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டு இருந்த நிலையில், மற்றுமொரு விஷயம் சினிமா உலகில் வலம் வருகிறது. நடிகர் அஜித் படத்தை அடுத்து தயாரிக்கப்போவது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் என்பதுதான் அது!! இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் கெஸ்ட் ரோல் செய்து இருப்பதன் மூலம் ஸ்ரீதேவி குடும்பத்தில் முக்கிய நண்பரானார் அஜித். ஸ்ரீதேவியின் மறைவுக்கு முன்னரே அஜித்திடம் அவர் பல விஷயங்களை மனம் விட்டு பேசியதாகவும் ஸ்ரீதேவியின் பண சிக்கலை கேள்விப்பட்டு மிக வருத்தப்பட்டு அவருக்காக ஒரு படம் பண்ண அஜித் தாமாக முன்வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு பின்னர் ஸ்ரீதேவி மரணம் அடைந்ததை சற்றும் எதிர்பாராத அஜித், சென்னையில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு தன் மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் கணவர் போனி கபூருக்கு ஆறுதல் கூற மும்பை பறந்தார். சந்தித்த வேளையில் தான் முன் வந்து போனி கபூருக்கு ஒரு படம் பண்ணுவதை பற்றி உறுதி கொடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால், அதற்கு பிறகு போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அதற்கான இயக்குனர் தேர்விலும் அஜித் மும்முரம் காட்டி கொண்டு இருக்கிறார். இப்படி செய்திகள் கசிந்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அஜித் இப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லை என்றும் விசுவாசம் படம் முடிந்த பின்னரே அடுத்த பட அறிவிப்பு என்று சம்மந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே மன விரக்தியில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் முன் வந்து இப்படி உதவ வேண்டும் என்று அவரின் ரசிகர்களும் வேண்டுகோள் விடுப்பதாக செய்தி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here