சின்சியர் “தல”- எனர்ஜெட்டிக் “தளபதி”, காஜல் அகர்வால் சொல்லும் ரகசியம்

0
Kajal Agarwal on VIjay and Ajith

நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தார். பாகுபலி புகழ் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய மகதீரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்திருந்த நேரத்தில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்திலும் நடித்து தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார். இருப்பினும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் நடித்த துப்பாக்கி தான் கடை கோடி தமிழ் ரசிகன் வரைக்கும் அவரை கொண்டு சேர்த்து பெரும்புகழ் பெற்று கொடுத்தது.

அதற்கு மிக முக்கிய காரணம் இவரின் இளமை துள்ளும் கதாபாத்திரமும் விஜய்- யுடன் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி யும் தான். பின் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்து வந்தவர் தளபதியுடன் இரண்டாம் முறையாக ஜில்லா படத்திலும் ஜோடி சேர்ந்தார். தனுஷ் , ஜீவா போன்றோர்களுடனும் ஜோடி போட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது.
தமிழ்சினிமாவின் தற்போதைய சென்சேஷன் ஆன தல-தளபதி யின் அடுத்த படங்களில் கதாநாயகி ஆனார்.

ஒரு பக்கம் தளபதி உடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்தது மறுபக்கம் தல யுடன் முதல் முறையாக ஜோடி சேருவது என்ற டபுள் குஷியில் உள்ளவர் இருவருடன் ஜோடி சேர்ந்தது பற்றி மனம் திறந்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தலயுடன் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகவும் அவரின் அயராத உழைப்பும் சின்சியாரிட்டி யும் தன் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கூறியுள்ளார்.
தளபதி பற்றி குறிப்பிடுகையில் அவரை போல் அன்பான எனர்ஜெட்டிக்கான மனிதரை பார்ப்பது அரிது என்றும் அவரின் வேலை பார்க்கும் திறனை பார்த்து தான் பிரமிப்பதாக மனம் திறந்து உள்ளார். மேலும் தன் இப்படங்களின் வெளியீட்டுக்கு தான் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24- ந் தேதி வெளியாக உள்ளது மெர்சல் படம் செப்டம்பர் இறுதிக்குள் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here