சிம்பு , AAA பட தயாரிப்பாளர், இயக்குனரை கதற வைத்தார்; ஸ்ரேயா, தமன்னாவை பதற வைத்தார்; உண்மை என்ன??

0

சிம்பு நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வெளிவந்த படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு இந்தத் திரைப்படம் பெரிய தோல்வியடைந்தது.

படப்பிடிப்பில் இருக்கும்போதே சிம்புவுக்கும் தயாரிப்பாளார் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப்படம் தோல்வியடைந்ததும் அந்தப் பிரச்னை இன்னும் பெரிதானது.

இந்நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரனும் நேற்று வியாழக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் பல தகவல்களைக் கூறினார்.

“ஆதிக் முதலில் சொன்ன அந்தக் கதை கமர்ஷியலாக, அருமையாக இருந்தது. அதனால் சிம்புவுக்கு உடனடியாகக் கடந்த 2016 பிப்ரவரி மாதம் அட்வான்ஸ் கொடுத்தோம். அந்த ஏப்ரல் மாதம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஷூட்டிங் தொடங்கியது. படத்தை அந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

இதற்கிடையில், நண்பர்கள் பலர் சிம்புவைப் பற்றி பலவாறு சொன்னார்கள். இருந்தும் அவர் மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுத்தோம். சிம்பு படம் என்றால் ஃபைனான்ஸும் ஒழுங்காகக் கிடைக்காது என்பதும் அப்பொழுதுதான் தெரிந்தது.

பெரும் பிரச்சனைகளுக்கிடையே இடையே ஷூட்டிங் தொடங்கி வேலைகளை ஆரம்பித்தோம். அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த ஷூட்டிங்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தார் சிம்பு.

குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரமாட்டார்; எட்டுமணிநேர கால்ஷீட்டில் கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் வந்து அரைகுறையாகக் காட்சிகளை முடிப்பார். ;
இவருடன் ஜோடியாக நடிக்க ஒருவருமே விரும்பவில்லை த்ரிஷாவும் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டார் இந்நிலையில் தான் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தோம்.

இதற்கிடையில் ஷ்ரேயாவுடன் நடிக்க முடியாது என்றுகூறி வேறு நடிகையை மாற்றும் படி கூறினார்.

இந்த நிலையில் என்னை அழைத்த சிம்பு, ‘எடுத்தவரை போதும். ஷூட்டிங்கை நிறுத்திக் கொள்ளலாம்” என்றார். ‘35 சதவிகிதம் முடிந்திருக்கும் படத்தை வைத்து என்ன செய்வது’ என்று கேட்டேன். ‘இதுவரை எடுத்த படமே நல்லா இருக்கு. இதை இரண்டு பாகங்களா எடுக்கலாம். இரண்டாம் பாகத்தை சம்பளம் வாங்காமலே நடிச்சுத் தர்றேன். அதனால எடுத்தவரை உள்ள ஃபுட்டேஜை முதல் பாகமா ரிலீஸ் பண்ணிடுங்க’ என்றார்.

என்னை நம்பித்தான் படம் எடுத்திருக்கீங்க. இதுல என்ன இழப்பு வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீங்க ரிலீஸ் பண்ணுங்க. இல்லைனா படம் முடிய இன்னும் மூணு வருஷங்கள்கூட ஆகலாம். ‘பட தாமதத்துக்கு நான் காரணம் இல்லை’னு எழுதிக் கொடுங்க. நான் முடித்துத்தர்றேன்’ என்றுகூறி என்னை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளினார்.

அவர் சொன்னதுபடியே படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்தோம்.
அதற்கு பிறகும் படப்பிடிப்பிற்கு வராமல் சிம்பு இழுத்தடித்தார்.
இப்படி 76 நாள்கள் வசனக் காட்சிகளை ஷூட் செய்ய கால்ஷீட் கொடுத்த சிம்பு, வெறும் 25 நாள்களே நடித்தார்.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவர் வீட்டில் அவருக்காக காத்திருந்து இருந்தோம். மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை காக்கவைத்தார்.
பிறகு, ‘அடியாட்களுடன் வந்துள்ளோம்’ என்று போலீஸில் புகார் செய்து எங்களை வீட்டிலிருந்து வேளியேற்றினார் சிம்புவின் தந்தை.

டப்பிங்கிற்கும் சரியாக வராமல் அவர் வீட்டின் டாய்லெட்டில் இருந்து டப்பிங் பேசி எங்களுக்கு அனுப்பி வைத்தார் அதை ஸ்டுடியோவில் வைத்து மண்டை காய்ந்து குவாலிட்டி ஆக மாற்றுவதற்குள் ஒரு வழி ஆகி விட்டோம்.

இதற்கு பிறகு படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து சிம்பு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

பிறகு இந்தப்படத்தால் ஏற்பட்ட கடனின் ஒருபகுதியை அடைக்க என் வீடு, சொத்துகளை விற்றேன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கமும் – நடிகர் சங்கமும் எனக்கு ஒரு நல்ல பதிலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.”

படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு “நான் திருந்திட்டண்ணே. மொட்டை அடிச்சுட்டேன். பாட்டில்களை எல்லாம் உடைச்சிட்டேன். வாங்க பேசலாம். ஹெல்ப் பண்றேன்’ என்று சொன்னார். பிறகு நாங்கள் சந்தித்தோம்.
அதற்கு பிறகு, என் ஃபோன் அழைப்புகள் எதையும் அவர் எடுப்பதே இல்லை.”
சிம்புவால் நானும் இயக்குனரும் மட்டும் பாதிப்படையவில்லை தமன்னா, ஸ்ரேயா, கோவை சரளா போன்றவர்களும் ஷூட்டிங்கில் பாதிப்படைந்து மனம் வெறுத்தனர்.
அனைவரின் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்.

படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனிடம் கூறுகையில்,

“எனக்கும் சிம்பு அண்ணாவுக்கும் எந்தத் தனிப்பட்ட பிரச்னையும் இல்லை, வேலை என்றால் கொஞ்சம் முன்பின் நடந்துகொள்வார். தயாரிப்பாளருக்கு எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாது என்று நானும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டிருந்தேன்.

மரியாதையில் அவர் சொல்வதை ஒப்புக்கொண்டு பண்ணி முடித்தேன். தயாரிப்பாளர் போட்ட முதல் வீணாகக் கூடாது என்பதால்தான் எடுத்தவரை ஒரு படமாக்கி அப்படியே ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன். இப்போது, என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கு உறுதுணையாக நிற்க இங்கு வந்துள்ளேன்” என்றார்.

சிம்புவின் இந்த கூத்துக்கள் தெரிய வருவது முதல் முறை இல்லை என்றாலும் இந்த முறை சற்று அழுத்தமாகவே புகார் செய்யும் அளவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணி ரத்னம் இயக்கத்தில் வேறு சிம்பு நடிப்பதாக இருப்பது அந்த வட்டாரத்தில் உள்ளவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இதனால் சிம்பு மணிரத்னம் படத்தில் இருந்து நீக்க படலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here