டிசம்பர் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறார்.. அரசியல் கட்சியை அறிவிக்கிறார்… – முடிவுக்கு வருமா ரஜினியின் அரசியல் என்ட்ரி குழப்பங்கள்??

0
Rajinikanth

இனி கேள்விக்கே இடமில்லை… ரஜினியின் அரசியல் ஆரம்பம்! – இது ரசிகர்களின் எதிர்பார்ப்பு கலந்த ஆர்ப்பரிப்பு..

2.0, காலா படத்திற்கான விளம்பர யுத்திகள் ஆரம்பம் – இது விமர்சகர்களின் நக்கல் கணிப்பு.

இந்த தடவையாவது இவர் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும் – இது நடுநிலையாளர்களின் எண்ணம்.

வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்விற்கு பிறகு அவரின் அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார் என்ற பரபரப்பு செய்திக்கான ரியாக்ஷன் தான் மேலே குறிப்பிட்டவை.

கடந்த 20 வருடங்களாகவே இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பங்களுக்கு மீடியாவும் திரி கிள்ளி பற்ற வைத்து கொண்டிருக்க, அதை தங்களுக்கு சாதகமாகவும் சில அரசியல் காட்சிகள் பயன்படுத்திக்கொள்ள, இந்த அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த மாத இறுதியில் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள 6 நாட்கள் ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு 20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பாக அமையும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி உருவாக வேண்டும் அது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவர், முன்னர் வைகோ விஜயகாந்த் போன்றவர்களை முன்மொழிந்து ஆதரித்து வந்தார்.

ஆனால் அவர்களின் தொடர் தோல்விகளால் நம்பிக்கையின்மையாலும் அவர்களை விட்டு ரஜினிகாந்த் மேல் அதிக நம்பிக்கை வைத்து அவருடன் தொடர்ந்து சந்தித்து அரசியல் குறித்து பேசி வருகிறார்,

மேலும் ரஜினியால் மட்டும் தான் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று உறுதி பட சொல்கிறார்.

ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடையே பேசிய ரஜினி அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டதை அறிவித்தார்.

ஆனாலும் ரசிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் பொது மக்களுக்கு ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து சில சந்தேகங்கள் தொடர்ந்தன. இதனைப் போக்கும் வகையில், ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்யும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் தமிழருவி மணியன்.

இது மக்களின் பல்ஸ் பார்க்கவே செய்த முயற்சி என்று சொல்லப்பட்டது.
இப்போது தனது அடுத்த கட்ட நகர்வை ரஜினி அறிவிக்கத் தயாராகிவிட்டார்.
இதுகுறித்து தமிழருவி மணியன் கூறுகையில்,

“20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பட்டிமன்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தரக்கூடிய வகையில் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான ரசிகர்கள் சந்திப்பு இருக்கும். நிச்சயம் அறிவிப்பு அந்த 6 நாள்களில் ரஜினிகாந்த் தமிழகத்தின் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க போகும் செய்தியை அவர் மிக நிச்சயம் அறிவிப்பார்.
இனி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு இடமே இல்லை. இதை என்னால் உறுதியாக கூறமுடியும். இடைத்தேர்தலை மட்டுமே சந்திக்கக் கூடிய ஒரு வேட்பாளராக ரஜினிகாந்த் தன்னை முன்னிறுத்துகிற மனிதர் இல்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நல்ல ஒரு அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் அவர் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று கூறியிருந்தார்,”

20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பாக இது இருக்குமா?? அல்லது திரும்பவும் விட்ட இடத்தில இருந்து மீண்டும் தொடங்கி மக்களை குழப்பும் செயல் ஆக அமையுமா ?? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் அந்த ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here