தனது முதல் அரசியல் மேடையில் வெளுத்து கட்டிய “அரசியல்வாதி” ரஜினிகாந்த். ருசிகர பேச்சுக்கள் இதோ

0
Rajinikanth politics

கடந்த வருட இறுதியில் தனது அரசியல் அறிவிப்பை வெளியீட்டு பின்பு அமைதி காத்து வந்தார் ரஜினிகாந்த். தனது கலையுலக நண்பரும் அரசியலில் சக கட்சி தலைவராகி இருக்கும் கமல்ஹாசன் முன்னோக்கி கட்சி துவக்கி பயணத்தை ஆரம்பித்தாலும் ரஜினி மன்ற நிர்வாகிகள் தேர்வு, கட்சியை பலப்படுத்தல், அடுத்த பட அறிவிப்பு, காலா ரிலீஸ் என அமைதியாக காய் நகர்த்தி வந்தார்.

இதனால் இவர் மீண்டும் சினிமாவில் தான் நடிப்பாரா, அல்லது அரசியலில் இறங்குவார் என்று பத்திரிகையாளர்களும் மக்களும் குழம்பி இருந்தனர் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் இன்று நடந்த எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் சுமார் 40 நிமிடங்கள் பரபரப்பாக பேசினார்.
அதில் சில முக்கியமான துளிகள் இதோ:

 • எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது.
 • மக்களே மன்னித்துவிடுங்கள், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம்.இனி அப்படி நிகழாதவாறு பார்த்துக்கொள்வோம்.
 • தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
 • அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்?என்னால் எம்ஜிஆராக முடியாது. ஆனால், எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்.
 • கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது.
 • தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
 • எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது; எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி.
 • தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது.
 • தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்.
 • இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.
 • 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
 • 13 ஆண்டுகள் மிகுந்த திறமைசாலியான திமுக தலைவர் கருணாநிதியை ஆட்சிக்கே வரவிடாமல் தடுத்தவர் எம்ஜிஆர்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியபொழுது கைதட்டல்களை ஆரவாரங்களும் அடங்க வெகு நேரமாகியது. அரசியல் மாநாடு போன்று நடந்த இந்நிகழ்வு ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here