தளபதியின் தங்க குணம், நெகிழும் திரையுலகம்

0
Ilayathalapathy Vijay

இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் இயக்குனர் சங்க தேர்தலில் போட்டி இட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமத்தில் உள்ள ஷோபா திருமண மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த சந்திப்பில் தளபதி விஜய்யின் வள்ளல் குணத்தை நினைவு கூர்ந்தார். சென்ற 2012- இல் டைரக்டர் யூனியன்-ல் ஒரு சிறிய பண பற்றாக்குறை இருந்த பொழுது செய்வதறியாமல் தவித்த தருணத்தில் அதை பற்றி கேள்வி பட்ட தளபதி விஜய் தன் அப்பாவும் இயக்குனரும் ஆன எஸ். ஏ. சந்திரசேகர் மூலம் யூனியனுக்கு 25 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார்.

காலத்தினால் செய்த உதவி இது என்று அன்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பூரிப்படைந்தார் இயக்குனர் விக்ரமன். இந்த வள்ளல் குணத்திற்காக மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டிருப்பதாக தன் உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்து கொண்டார். நடிகர் விஜய் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் விக்ரமன் புது வசந்தம், கோகுலம் போன்ற படங்களின் மூலம் வெற்றிகரமான இயக்குனர். பின்பு தளபதியுடன் சேர்ந்து பூவே உனக்காக படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர், தன் பட ஹீரோ பற்றி இப்படி கூறியிருப்பது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

மேலும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் விஜய் மிக முக்கியமான மெர்சல் யூனிட் ஆட்களுக்கு 150 தங்க காசுகள் பரிசளித்துள்ளார்.
அயராது ஓடி ஆடி திரைக்கு பின்னால் வேலை செய்து வரும் அனைவருக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே இப்படி பரிசளித்து திக்கு முக்காட செய்திருக்கிறார் தளபதி. படத்தின் வெற்றிக்கு பிறகே சார்ந்தோர்க்கு பரிசளிக்கும் ஹீரோக்கள் மத்தியில் படப்பிடிப்பின் நடுவிலே அவர்களை பாராட்டி பரிசளிப்பது இவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நெகிழ்ந்து மகிழ்கிறது தமிழ் திரையுலகம்.
மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக வரும் ஆகஸ்ட் -20 சென்னையில் நடக்க இருக்கிறது.

உதயா படத்திற்கு பிறகு தங்க தளபதி விஜய்யும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும் சேரும் இப்படத்தின் இசையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here