Vijay 62

தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே இருக்கும் பிரச்சனையால் இந்த மாதம் முழுவதும் தியேட்டர்கள் மூடலும் படப்பிடிப்புகள் ரத்தும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகம் ஆகும் வரை எந்த தயாரிப்பு பணியிலும் ஈடுபட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் நடைபெற்று கொண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

தடை உத்தரவை மீறியும் சண்டை காட்சி ஒன்றை படமாக்க பட்டிருப்பதாகவும் சில தயாரிப்பாளர்கள் கொதித்து எழுந்து தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். படக்குழுவோ படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டு பெருஞ்செலவு செய்தமையால் Special Permission வாங்கிய பிறகே நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் மற்றொரு தரப்பினாரோ பெரிய நடிகர், பெரிய இயக்குனர் மற்றும் அரசியல் பலம் கொண்ட தயாரிப்பாளர் என்பதால் அவர்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என இருப்பதாய் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவிக்கின்றனர். ஆனால் படக்குழுவோ இதே போன்று இன்னும் படங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் இந்த பதிலை ஏற்று கொள்ள முடியாமல் எங்கு போய் முறையிடுவது என்றும் தெரியாமல் விரக்தியில் இருக்கின்றனர் ஒரு தரப்பினர்.

விஜய் முருகதாஸின் இப்படம் விவசாய கதை கொண்டுள்ளதாகவும் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here