தானா சேர்ந்த கூட்டம் இதன் ரீமேக்?? அல்ல காப்பியா ??- கதை என்ன ??

0
Thaana Serntha Kootam

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

சமூக வலைதளங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாகப் பேசுப்பட்டு, இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை நோக்கி எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து இருக்கிறது.

படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே, இது ‘ஸ்பெஷல் 26‘ ரீமேக்தான் என முணுமுணுக்கப்பட்டது.

என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை என்றாலும் படத்தில் இருக்கும் காட்சிகள் அப்படத்தின் தழுவல் தான் என்பது போல் சொல்லாமல் சொல்லி இருக்கிறது

அக்ஷய் குமார் நடிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வந்த படம் ‘ஸ்பெஷல் 26’ (Special 26).

(Special 26) திரைப்படமே 1987ஆம் வருடம் நடந்த தொடர் போலி சிபிஐ ரைடுகளை அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான்.

Opera House Heist என்று பெயர் போன அந்த நிகழ்வு என்னவென்றால் :

மார்ச் 17ம் தேதி 1987-இல் பத்திரிகை ஒன்றில் “ரகசிய உளவுத்துறை பணிகளுக்கு 50 நபர்கள் தேவை. தகுதியான பட்டதாரிகள் நேர்காணலுக்கு வரவும்” என முகவரியுடன் கூடிய விளம்பரத்தை மோகன் சிங் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.

26 நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாளை ஒத்திகைக்காக ஒரு சோதனைக்குச் செல்ல இருக்கிறோம். நாளை இதே இடத்தில் சந்திக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

மறுநாள், ஓபேரா ஹவுஸ் நகைக்கடைக்குள் இந்தக் குழுவுடன் சிங் நுழைந்து தன்னை கடை உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, வருமான வரி சோதனைஎன்று கூறி அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் அணைக்கும் படி உத்தரவு தெரிவிக்கின்றனர்.

கணக்கில் வராத பணம், நகைகள், பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. பிடிபட்ட அனைத்தும் தாங்கள் வந்த பேருந்தில் எடுத்துச் செல்ல உத்தரவிட்டுகிறார் சிங்.

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு கடை உரிமையாளருக்குச் சந்தேகம் வந்து காவல்துறைக்கு அழைத்துச்சொல்ல, பின்புதான் நடந்திருப்பது ஒரு கொள்ளை என்றே தெரியவருகிறது.

ஹோட்டலில் கொடுத்த முகவரியை வைத்து கேரளாவுக்கும், பின்பு துபாய் வரையும் போய் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை.

மொத்தமாக 30லிருந்து 35 லட்சம் வரை கொள்ளையடித்த இந்தச் சம்பவம்தான், கொஞ்சம் முன்னும் பின்னும் சினிமாக்காக சுவாரசியம் கூட்டப்பட்டு `ஸ்பெஷல் 26′ படமாக மாறியது.

அதே உண்மை சம்பவத்தை வைத்து, ‘தானா சேர்ந்த கூட்டத்தை’ வேறு ஒரு வெர்ஷனில் விக்னேஷ் சிவன் அண்ட் கோ எடுத்திருக்கலாம், அல்லது ரீமேக் ரைட்ஸ் வாங்கி எடுத்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here