திமுக, அதிமுகவிற்கு எதிராக ஆர். கே. நகரில் களம் இறங்கும் விஷால். பின்னணியில் யார்??

0
Vishal

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு எதிராக விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள்நேற்றிரவு வெளியானது.
இவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, சரத்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சீனியர் டீமை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியது நாசர் மற்றும் விஷால் டீம்.

அந்த நேரத்தில், விஷால் டீமின் முதுகெலும்பாக விளங்கினார் கமல்ஹாசன் என சொல்லப்பட்டது. விஷால் டீமை வாழ்த்தியது மட்டும் இன்றி பல யோசனைகளை கமல்ஹாசன் சொன்னது போல் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், விஷால் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் தற்போது தமிழக அரசியலில் களத்தில் புயல் கிளப்பி கொண்டிருக்கும் கமல்ஹாசன் தான் காரணம் என்ற வகையில் பேச்சு ஆரம்பித்து இருக்கிறது.

விஷால் தரப்பை தொடர்பு கொண்டு உண்மையை அறிய முற்பட்டபோது அப்படி ஒரு எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சொல்லப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் மாலை அளவில் விஷால் போட்டியிட போவதாக அறிவித்த பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியது மற்ற நடிகர்களை முந்தி களத்தில் இவர் குதித்து இருப்பது பலரின் புருவத்தை உயர்த்தி இருந்தாலும் இதற்கு பின்னால் கமல் தான் இருக்கிறரா என்று ஐயம் கொள்ள வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here