“நமக்கு எதுனாலும் விஜய் அண்ணா முன்னே வந்து நிற்பார்” : சஞ்சீவ் குடும்பம் நெகிழ்ச்சி

0
Sanjeev and Vijay

நடிகர் சஞ்சீவ் என்றால் சின்னத்திரையில் அறியாதவர்கள் எவரும் இல்லை. சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி கொண்டு இருந்து சின்ன திரையில் பிரபலம் ஆகி இருந்தவருக்கு, ஒரு கட்டத்தில் வில்லன் வேடமே வந்து கொண்டு இருந்தது. ஊரை சுற்றும் பொறுக்கி, பெண்களை காதலித்து ஏமாற்றும் பேர்வழி போன்ற தமிழ் தாய்மார்கள் வசை படும் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தவருக்கு திருமதி செல்வம் தொடர் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

தாய்மார்கள் அனைவரும் இப்படி ஒரு பொறுப்பான, பொறுமையான மகன் மருமகன் தனக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்தும் படி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து நடித்து இருப்பார். தன்னுடன் பணியாற்றிய ப்ரீத்தியே தனக்கு காதல் மனைவியாக அமைத்து, குழந்தைகள் என்று இருப்பவர், யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

அது மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் மிளிர்ந்து கொண்டு தான் இருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் இவரது வேகமான வார்த்தை பிரயோகம் ரசிகர்களிடையே வெகு பிரசித்தம். அது மட்டுமின்றி தளபதி விஜய்யின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆக அவருக்கு நண்பனாக இருப்பவர் ஆரம்பத்தில் அவரின் பத்ரீ, புதிய கீதை படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூட தொகுப்பாளராக களை காட்டியவர், சமீபத்திய பேட்டியில் தளபதி விஜயுடன் ஆன அவரின் நட்பை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வளவு ஆண்டு கால நெருங்கிய நண்பன் விஜய் சிறிதளவும் மாறவில்லை என்று பெருமித பட்ட பின் அவரின் மனைவி ப்ரீத்தி,

விஜய் அண்ணா நாங்க வீட்டுக்கு போனா அவரே எங்களுக்கு டீ போட்டு தந்து அன்பை காட்டுவார். எங்களுக்கே ஒரு மாதிரி இருக்கும். எங்களுக்கு ஒன்னுனா கண்டிப்பா விஜய் அண்ணா தான் முதல்ல வந்து நிற்பார் .

என்று பெருமை பொங்க கூறி பூரித்துளார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here