“நான் அரசியலுக்கு வர போறேன்னு சொல்லல” ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பில் பேசியது என்ன?? EXCLUSIVE

0

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொள்ளும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய கலைஞானம் மற்றும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனரும் நண்பரும் ஆன மகேந்திரன் பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து இந்த மாத இறுதி வரை இருக்கும் இந்த நிகழ்ச்சி கடைசி நாளில் அரசியலை பற்றி தன் வெளிப்பாட்டை அறிவிக்கப்போவதாக ரஜினி அறிவித்து உள்ளார் அதில் பேசியதாவது:

ஹீரோவாக அறிமுகமான காலத்தில் மகேந்திரன் சார் டைரக்‌ஷனில் நடிக்கும் போது நான் என் இஷ்டத்திற்கு நடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஷாட்டையும் ஓகே செய்வதற்குள் உயிர் போயிடும்.
‘ஜனங்களுக்குப் புடிச்சிடுச்சு.. அவங்களுக்கு ஒத்துக்கிட்டாங்க..அதுக்கு அப்புறம் என்ன? அது தானே நாம செய்யுறது’ என்ற எண்ணத்தில் இருந்தேன். அதை மாற்றி நடிக்க வைத்தவர் அவர்.
எப்பவுமே முன்னாலே வந்து சொல்லுறதை விட பின்னாலே சொல்வது தான் நம் தலையில் ஏறும். நம் காதுகளில் வந்து விழும். முன்னால் எது சொன்னாலும் ஏறாது.
முள்ளும் மலரும் படத்தைப் பார்த்த மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ‘Excellent Performance! Congratulations!’ அப்படின்னு எங்க வீட்டுக்கு பொக்கே அனுப்பியிருந்தார்.

டிசம்பர் 12-ம் தேதி என்னுடைய பிறந்த நாளின் போது கடந்த பல ஆண்டுகளாகவே நான் வீட்டில் இருப்பதில்லை. அன்று மட்டுமாவது தனிமையில் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். அதனால் வெளியூர் போய்விடுவேன். இது எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் இந்த ஆண்டு நிறைய ரசிகர்கள் என் வீட்டு வரைக்கும் வந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள் என்ற தகவல் கேட்டு வருத்தப்பட்டேன்
. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். எப்போதுமே என் பிறந்த தினத்தன்று பார்க்க வர வேண்டாம். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். எதுவும் குறை இருந்தாலும் அதை பெரிது படுத்த வேண்டாம்.
இந்த ஆறு நாள் கூட்டம் முடிந்த பிறகு அரசியல் குறித்து நான் என்ன சொல்லப் போகிறேன் என்று ஜனங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு ரொம்பவே ஆர்வம் உள்ளது.

போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். போரை தினமும் தேடுவதா? இப்ப எதாவது போர் வந்து விட்டதா? ஏன் சொல்றாங்க.. இழுக்கிறாங்க.. பில்டப் கொடுக்கிறாங்க..என்றெல்லாம் பேச்சு எழுகிறது.

அரசியல் நமக்கு புதிதல்ல. நான் 96-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வந்து விட்டதால் அதில் என்ன கஷ்ட, நஷ்டங்கள்.. அதன் ஆழம் என்ன என்பதெல்லாம் தெரிந்திருப்பதால்தான் தயங்குகிறேன். தெரியலைன்னா ‘ஓகே’ன்னு சொல்லி வந்துடுவேன்.
யுத்தத்திற்குப் போனால் ஜெயிக்கணும். ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் பத்தாது. வியூகமும் வேண்டும். என்றாலும் ‘ரொம்ப இழுக்கிறார்’ என்றெல்லாம் பேசப்படுவதால் 31-ம் தேதியன்று என் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி நான் தெரிவித்து விடுகிறேன். கட்டுப்பாடும், ஒழுக்கமும்தான் முக்கியம். நான் அரசியலுக்கு வர போறேன்னு சொல்லல..என் நிலைப்பாட்டை அன்னிக்கு சொல்ல போறேன்னு தான் சொல்றேன் .
எப்போதும் சொல்வது போல குடும்பம், தாய், தந்தை, குழந்தைகள் ஆகியவற்றை முதலில் பாருங்கள். பசங்களை நல்லா படிக்க வைங்க.

இப்போ நிறைய ஊடகங்கள் வந்து விட்டன.. சமூக வலைதளங்களும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிறைய எதிர்மறைச் செய்திகள் வருகின்றன. அந்த மாதிரியான நெகட்டிவ் விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.
கொலை, கற்பழிப்புச் செய்திகளைப் பார்க்காதீர்கள். அது மனதை நிஜமாகவே பாதிக்கும். வெளியில் சுற்றி விட்டு வீட்டிற்குச் சென்று முகத்தைக் கழுவினால் அழுக்கு படிந்திருக்கிறது தெரியவருமோ.. அதே போல நம் மனதை மேற்படி செய்திகள் நமக்குத் தெரியாமலேயே ரொம்பவே படிந்து விடும் அதை சரியாக்க வேண்டுமென்றால் தியானம் செய்ய வேண்டும்.

நல்ல செய்திகளைக் கேட்டு உள் வாங்க வேண்டும். எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே யோசியுங்கள். அதுதான் உங்கள் மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கைக்கும் நல்லது.

நன்றி.. நம்ம வேலையை ஆரம்பிப்போம்..

இவ்வாறு அவர் பேசி முடிக்க அரங்கமே அதிர்ந்து அடங்க நேரம் ஆனது டிசம்பர் -31 இல் என்ன அறிவிக்க போகிறார் என்று ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து கொண்டு இருப்பதாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here