நோ சொன்ன ஓவியா, மனக்கசப்பை மறந்த தளபதி : Thalapathy62 விவரங்கள்

0
Vijay 62

மெர்சல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் ஆன தளபதி விஜய்யின் அடுத்த படம் பற்றி தான் திரைவட்டாரம் முழுவதும் முணுமுணுக்கும் விஷயம்.

மெர்சல் படத்தின் ஹிமாலய வெற்றியை தக்க வைக்க நினைக்கும் விஜய்; ஸ்பைடர் படத்தை படுதோல்வியை சரிக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் முருகதாஸ் என்ற வித்தியாசமான கூட்டணியில் தயாராகி கொண்டு இருக்கும் படத்தை பற்றிய செய்திகளை இப்பொழுதே பகிர ஆரம்பித்த நிலையில், படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

இப்போதைக்கு நடிகர்- நடிகை தேர்வும், திரைக்கதை வடிவமும் நடைபெற்று இருப்பதாக தகவல்.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு இப்படத்தில் முக்கிய நகைச்சுவை வேடத்திற்கு கம்மிட் ஆனதாக சொல்லப்பட்டது.

மேலும் படத்தில் பணிபுரிய இருக்கும் வல்லுநர்கள் பற்றி செய்தி வந்து கொண்டிருந்தது. இதை எல்லாம் விட Sensational-ஆக படத்தை தயாரிக்க போவது கலாநிதி மாறனின் சன் பிக்ச்சர்ஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்திற்கு பிறகு கலாநிதி மாறனின் நேரடி தயாரிப்பில் வெளியாக இருக்கும் இரண்டாவது படம் இது.

படத்தின் தலைப்பு முடிவாகாததால் இப்போதைக்கு ‘தளபதி 62’ என்றே அழைக்கப்படுகிறது தெறி, மெர்சல் வரிசையில் தலைப்பும் ரகசியமாக வைத்து பின்னர் அறிவிக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே காவலன் பட ரிலீஸ் பிரச்சனையில் திமுக தரப்பிற்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதை பிரதிபலிக்கும் வகையில் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட மன கசப்பை அதிமுகவுக்கு ஆதரவு அளித்து போக்கினார் தளபதி.

மீண்டும் அதே திமுக தரப்பை சேர்ந்த கலாநிதி மாறனுடன் கண்டிப்பாக இணைய மாட்டார் என்று அனைவரும் எண்ணிய போது தளபதியோ தொழில் வேறு, அரசியல் வேறு என்று பழைய மன கசப்பை மறந்து அவருடன் இணைந்து இருப்பதாக தெரிகிறது.

மேலும் படத்தின் கதாநாயகியாக தீரன் படம் மூலம் கவர்ந்த ரகுல் ப்ரீத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னொரு கதாபாத்திரத்துக்கு பிக்பாஸ் மூலம் தமிழக மக்களின் நாயகியாக திகழ்ந்த ஓவியாவை அணுகியது படக்குழு.

படத்தின் நாயகி கதாபாத்திரம் இல்லாததால் ஓவியா இதில் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

முன்பு போல் இருந்தால் விஜய் போன்ற நடிகரின் படத்தில் ஒரு குத்து பாட்டாவது ஆட மாட்டாமோ என்று எண்ணி இருப்பார் ஓவியா இப்பொழுது பிக் பாஸ் மாற்றத்தால் ஏற்பட்ட மன மாற்றம் தான் இது என்று சலித்து கொள்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here