பாலா இயக்கத்தில், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக போவது??

0
Dhruv and Shriya

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைப்பது உறுதி என்று சொல்லப்பட்ட வந்த நிலையில் அவர் நடிக்க இருக்கும் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஐ இயக்க இருப்பது இயக்குனர் பாலா தான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்னும் அவரின் பட பூஜை கூட நடக்கவில்லை அதற்குள் தன் அப்பாவை விட அதிகம் பிரபலம் ஆகி விடுவார் போல.

இயக்குனர் பாலாவின் முதல் பட ஹீரோவாக சேதுவில் நடித்த விக்ரம் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டது அனைவரும் அறிந்ததே. எனவே தனக்கு ராசியான பாலாவையே தன் மகன் அறிமுகமாகும் படத்தை இயக்கவேண்டும் என்று செண்டிமெண்ட் பார்த்து பாலாவை இயக்க கைகோர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி ஒரு விதமான மனநிலைகளை கடந்து போகும் ஒருவனின் வாழ்க்கையை பற்றியது என்பதால் பாலாவை தவிர சிறப்பாக எடுக்க முடியாது என்று கருதி இதை விக்ரம் எண்ணி இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ இது வரை நேரடி படங்களையே தமிழில் இயக்கி வந்தவர் முதன்முதலாக ரீமேக் செய்ய் இருக்கிறார்.

Shriya Sharmaஇதற்கு இடையில் துருவ்-ற்கு ஜோடியாக நடிக்க இருப்பது ஷ்ரியா சர்மா என்று தகவல் கசிந்துள்ளது. இவர் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதலில் சிறுமியாக வந்தவர்.

அதன் பிறகு சூப்பர்ஸ்டாரின் எந்திரன் மற்றும் பல விளம்பரப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிட்சயம் ஆனவர். துருவ் ஓத்த வயதில் இருப்பதால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி நல்ல காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி கிளாமர் காட்டி கொண்டு இருக்கும் ஷ்ரியா தரப்பில் இருந்து அதிகாரபூர்வ பதில் ஏதும் வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here