முதன்முறையாக வெளிப்படையாக ரஜினியை விமர்சித்த கமல் : சூடு பிடிக்கும் அரசியல் களம்

0
Rajinikanth and Kamal

ரஜினி, கமலின் அரசியல் வருகைக்கு பிறகு தமிழக அரசியல் களம் மாறி இருக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து மக்கள் சந்திப்பு, மாநாடு என்று முன்னே நின்று வேகமாக செயல்படுகிறார்.

ரஜினியோ கட்சி நிர்வாகி தேர்வு, உறுப்பினர் சேர்க்கை என்று தயாராகி வந்தாலும் வரும் ஏப்ரல் மாதம் மாநாடு கூட்டி கட்சி அறிவிக்கும் முனைப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு இடையில் கடந்த வாரம் இமயமலைக்கு சென்றார் ரஜினி. ஏழு வருடங்களுக்கு பிறகு இமயமலை பயணம் மேற்கொள்ளும் ரஜினி, பத்து நாட்களுக்கு பிறகு தான் தமிழகம் வந்து சேருவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் இமயமலை பயணம் செய்ய முற்பட்ட பொழுது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் காவிரி மேலாண்மை குறித்தும் தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற சூழல் பற்றியும் ரஜினியிடம் கேட்ட பொழுது, பதிலுக்கு வணக்கம் என்று சிரித்து கொண்டே பதிலளிக்காமல் சென்று விட்டார்.


இது பல்வேறு சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உண்டானது. இந்நிலையில், குரங்கணி விபத்து குறித்து இன்று கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட பேட்டியில், ரஜினி இது போன்ற விஷயங்களுக்கு பதில் அளிக்க தவறியதை பற்றி கருத்து கேட்டதற்கு,

“அவர் இப்படித்தான் பல விஷயங்களில் மௌனம் ஆக இருக்கிறார்”
என்று விமர்சித்து இருக்கிறார்.

சினிமாவில் இருவரும் நல்லதொரு நட்பை பெற்று எந்த வித ஈகோ மனப்பான்மையுமின்றி பழகி வந்தாலும் அரசியல் என்று வந்தால் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க கூடும் அதன் வாறே முதல்முறையாக கமல் ஹாசன் ரஜினியை விமர்சித்தது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

இதை பற்றி ரஜினி தரப்பினர் சொல்வது என்னவென்றால், “ரஜினி முக்கியமான விஷயங்களை இமயமலை சென்று தான் தொடங்குவர் அது போல கட்சி ஆரம்பிக்கும் முன் இமயமலை பயணம் சென்று ஆசி பெற்று அடுத்தடுத்த விஷயங்களை தொடங்குவார். அதற்கு முன் விமான நிலையத்தில் கருத்து கேட்டதால் தான் பதில் அளிக்க மறுத்தார். அவர் திரும்பி வந்தவுடன் அவரின் செயல்கள் இதற்கு பதிலளிக்கும்” என்று கூறியுள்ளனர்.

எது எப்படியோ புது விதமான சூடு பிடித்துள்ள அரசியல் களத்தை தமிழ்நாடு மக்கள் காணப்போவது உறுதி என்றே நம்ப தோன்றுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here