மெர்சல் படம் நஷ்டமா ?? புலம்பும் விநியோகஸ்தர்கள், குழம்பும் ரசிகர்கள்

0
Mersal collections

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் அதிரி புதிரி வரவேற்பை பெற்று கொண்டாட பட்டது.

இது போக தமிழக பா.ஜ.க வின் மூலம் இலவச விளம்பரத்தை அடைந்து மிகப்பெரிய வருவாயை ஈட்டி கொண்டு இருந்தது.

மிகப்பெரிய சாதனையாக 250 கோடி வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து கொண்டு இருந்த நிலையில், சில விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மெர்சல் படம் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று சமீபத்தில் கூற, அனைவரையும் மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இன்னொரு தொலைக்காட்சி விவாதத்தில் தயாரிப்பாளரும் இயக்குனரும் பிரவீன் காந்தும் மெர்சல் படம் கிட்ட தட்ட 30-40 கோடி நஷ்டம் என்று பேசி இருக்கின்றனர்.

ரசிகர்களும், ஊடகங்களும் மெர்சல் படம் இமாலய வெற்றி அனைத்து முந்தைய சாதனையையும் முறியடித்து இருக்கின்றது என பேசி மாய்ந்து விட்ட நிலையில் நஷ்டம் என்ற தகவல்கள் ரசிகர்களை கலக்கம் அடையச்செய்துள்ளது.

இதை பற்றி உற்று நோக்கினால் அதன் சுற்றி இருக்கும் சிக்கல்கள் தெரியும் மெர்சல் படம் வசூலும் உண்மை நஷ்டமும் உண்மை.

இதற்கு முன்னாள் மிகப்பெரிய வெற்றி அடைந்த படங்கள் ஆன எந்திரன், கபாலி கூட தமிழகத்தில் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது.

ஆனால் மொத்தமாக பார்த்தால் லாபம் தான், அதே போன்று மெர்சல் படத்தின் பட்ஜெட், சம்பள கணக்கு, வட்டி கணக்கு, மார்க்கெட்டிங் போன்ற செலவுகள் எதிர்பார்த்ததை விட உயர்ந்தாலும் மொத்த வசூல் அனைத்தையும் சமப்படுத்தியதாக அமைந்தது.

மிக சில ஏரியாக்களில் மட்டுமே நஷ்டங்களை சந்தித்தது அதை தான் ஊதி பெரிது படுத்துவதாக ஒரு பேச்சு எழுகின்றது.

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று அனுபவித்து சொல்கின்றனர் நடிகர் விஜய் தரப்பினர்.

ஹும்… சரி தான்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here