மெர்சல் 5 Days- கடந்து வந்த சாதனைகளும், சோதனைகளும்

0
Mersal controversy
 • மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை உடனே நீக்க வேண்டும்.இல்லையேல் வழக்கு தொடர்வோம் என மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சார்ந்த தமிழிசை, பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் மிரட்டல் விடும் பாணியில் பேசியிருந்தனர்.இதற்கு ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன.
 • மெர்சலில் ஜி.எஸ்டி.க்கு எதிரான வசனங்களுக்கு தொடர்ந்து நடிகர் விஜயையும் மெர்சல் படத்தையும் மத்திய அரசு விமர்சித்து வந்த நிலையில், தமிழ் தயாரிப்பாளர் சங்கம் படத்திற்கு தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது.
 • 3 நாட்களிலே படம் நூறு கோடி வசூலை கடந்து விட்டதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 54 கோடி வசூலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று கேரளா கர்நாடகாவில் 17 கோடியும், அமெரிக்காவில் மட்டும் 5 கோடியும் மற்ற வெளிநாடுகளில் 28 கோடியும் குவித்து உள்ளதாக தெரிகிறது. இது தமிழ் பதிப்பின் மூலம் மட்டுமே வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு பதிப்பு அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.
 • எனவே ஐந்து நாட்களில் வசூல் 150 கோடியை தாண்டலாம் என்பது கணிப்பு விஜய் படங்களிலே குறைந்த நாட்களில் அதிக வசூல் ஈட்டிய முதல் படம் என்ற பெருமையை இதன் மூலம் ஈட்டியுள்ளது.
 • காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மெர்சலுக்கு ஆதரவாக தன் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதே போன்று கலை உலகில் இருந்து ஆதரவு நீட்டிய முதல் கரம் கமல்ஹாசனுடையது. தொடர்ந்து நடிகை குஷ்பூ இயக்குனர் ரஞ்சித் நடிகர் சிபிராஜ், சந்தனு மேலும் பல நட்சத்திரங்கள் விஜய்க்கும் மெர்சல் படத்திற்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து கொண்டு இருந்தனர்.
 • தீபாவளி அன்று வெளியான இந்தியாவில் வெளியான அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி தொடர்ந்து வசூல் சாதனையை படைத்து வருகிறது மெர்சல். இந்தியாவின் வசூல் சக்ரவர்த்தியான ஆமீர்கான் தயாரிப்பான Secret superstar பட வசூல் கூட இரண்டாம் இடம் தான்.
 • அமெரிக்காவில் 10 லட்சம் டாலர்களை மெர்சல் ஐந்து நாட்களில் வசூல் ஈட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரிய பட வைக்கின்றது.
 • ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல விஜய்க்கு மெர்சல் Breaking Point ஆக இருக்கும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்திக்கு வரிசையில் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றி இது என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
 • தமிழக பாரதிய ஜனதா தலைவரான H.Raja நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று மதரீதியாக வேறுபடுத்தி ட்வீட் செய்தார். அடுத்த நிமிடமே #Welovejosephvijay என்ற Hashtag ரசிகர்களால் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.
 • தொடர்ந்து தன் கண்டங்கள் மூலம் படத்திற்கான எதிர்ப்பை பதிவு செய்து வந்த ராஜா மெர்சல் படத்தை தான் நெட்டில் பார்த்ததாக தெரிவித்தார். இதற்கு நடிகர் விஷால் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
 • தற்போது பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அரசியலில் நுழைய அஸ்திவாரமாக தான் இது போன்ற பிரச்னைகளை அவரே கிளப்பி வருகிறார் என்பது போல விமர்சித்துள்ளார்.இதனால் தளபதி ரசிகர்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
 • படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஹேமா ருக்குமணி மெர்சல் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் சாதனை படைத்து வருகிறது.இதற்கு முழுக்க முழுக்க ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மயில்சாமி பேசும்போது, மக்கள் பாதிக்கப்பட்ட ஒரு விஷயம் தான் ஜிஎஸ்டி. இந்த கருத்தை விஜய் மெர்சலில் கூறியதில் என்ன தவறு உள்ளது? இதுவரை விஜய் தான் நடித்த படங்களிலேயே அதிக ஃபேமஸ் ஆனது இந்த படத்தில்தான். அதனால் அரசியல்வாதிகளே, உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன், எல்லா படங்களுக்கும் பிரச்சனை தாருங்கள். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் போல் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் லாபம் அடையும் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here