யார் இந்த Fahad Fazil ??? “வேலைக்காரன்” – ஆதி பற்றிய குறிப்புகள்

0
Fahadh Faasil

வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் மோகன் ராஜாவின் வேலைக்காரன் படத்தை சுற்றி பல எதிர்பார்ப்புகள்;

அதற்கான காரணம் நடிகர் சிவகார்த்திகேயன், படத்திற்கு பிறகு இயக்கும் மோகன் ராஜா, அனிருத் இசை, நயன்தாரா என்று பல காரணங்கள் இருப்பினும் முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் Fahad Fazil அறிமுகமாக இருக்கும் படம் ஆக இது அமைகிறது.

வேலைக்காரன் படத்தில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் யார் இவர்??? வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த முக்கிய கதாபாத்திரத்தில் ஏன் இவர்?? என்ற தமிழ் ரசிகர்கள் பலருக்கும் கேள்வி எழலாம்.

அப்படி இவரை பற்றி தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும், தெரிந்து கொள்ள போகிறவர்களுக்கும் அறியாத விஷயங்கள் இதோ :

பல மலையாள தமிழ் படங்களை (காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா) இயக்கிய பிரபல இயக்குனர் பாசில் அவர்களின் மகன் தான் பஹத் பாசில்.

“Pappaiyude Swantham appoos” என்ற மலையாள படத்தில் தனது 9-வது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அவர் கதாநாயகனாக அறிமுகமான “Kaiyettum thoorathu” என்ற முதல் படம் படு தோல்வி அடைந்தது.

அதற்கு பிறகு Miami யூனிவெர்சிடியில் M.A.Philosophy – பயில சென்று விட்டார்.

பின்னர் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தவர் மிகவும் பிரபலமானது “Chappa kurishu” என்ற படத்தின் மூலம். மலையாள படங்களிலே மிக நீண்ட முத்த காட்சி மூலம் பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாக ஆரம்பித்தார்.

மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ் போன்ற பிரபலங்களுக்கு அடுத்து இளம் நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாய் மலையாள சினிமாவில் ஒளிர ஆரம்பித்தார்.

வளர்ந்து வரும் நடிகர்கள் நடிக்க தயங்கும் எதிர்மறை கதாபாத்திரங்களில் பட்டைய கிளப்ப ஆரம்பித்தவர், அடுத்தடுத்த படங்கள் எல்லாவற்றிலும் தனக்கு என்று ஒரு நடிப்பு ஸ்டைல் என்று இல்லாமல் எல்லாமாகவும் கலந்து கட்டி அடித்தார்.

கேரளாவின் உயரிய விருதான மாநில விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.

நடிகை நஸ்ரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து கைப்பிடித்தார்.

முன் ஏறிய நெற்றியுடன் சற்று வழுக்கையாக இருக்கும் இவரின் தோற்றம் முதல் முறை இவரை பார்க்கும் பொழுது அவ்வளவாக ஈர்க்க இயலாது. ராஜா ராணி, நேரம் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நஸ்ரியாவை இவர் கரம் பிடித்த போது தமிழ் ரசிகர்கள் இவரை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தனர்.

North 24 Katham, Maheshinte prathigaaram, Thondimuthalum Drirakshashiyum. Take off போன்ற படங்கள் மூலம் வெவ்வேறு தளத்திற்கு சென்று கொண்டிருக்கும் இவர் தொண்டர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து கொண்டு இருக்கிறார்.
இவரை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மலையாள சினிமாவின் விஜய் சேதுபதி.

ஆனால் இவரின் படங்களை பார்த்து, இவரின் நடிப்பை பார்த்து சிலர் இவருக்கு தீவிர ரசிகர்கள் ஆனார்கள். அதே போன்று வேலைக்காரன் படத்திலும் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் ஆக அமைந்து இருந்தால் இவர் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர போவது உறுதி.

“ஒரு கலைஞனுக்கு ரசிகர் மன்றம் தேவை இல்லை, ஆனால் சினிமாவிற்கு அது தேவைப்படுகிறது ” என்று Fahad ஒரு முறை கூறியுள்ளார்.

உண்மை தான்!!! சினிமாவின் வணிக வியாபாரத்துக்கு தான் ரசிகர் மன்ற அமைப்புகள் தேவை படுகிறது. கலையை நேசிக்கும் Fahad போன்ற உண்மையான கலைஞன் ஒரு குறிப்பிட்ட ரசிக கூட்டத்திற்குள் சிக்கி கொள்ள என்றுமே விரும்புவதில்லை.

மிஸ் பண்ண கூடாத இவரின் படங்கள் :

 • North 24 Katham
 • Maheshinte prathigaaram
 • Thondimuthalum Drirakshashiyum
 • Take off
 • Bangalore days
 • 22 Female Kottayam
 • Annayum Rasoolum
 • Artist
 • Oru Indian Pranayakatha
 • Iyobinde Pusthagam
 • Amen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here