ரஜினி, விஜய் பற்றிய செய்திகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்த பிரபல டிவி சேனல் Cum தயாரிப்பு நிர்வாகம்

0
Vijay and Rajini

பிரபல தனியார் தொலைக்காட்சியாக தமிழகத்தில் புகழ் பெற்ற நிறுவனம் அரசியல் கட்சியின் உறுதுணையுடன் தமிழ் படங்களை தயாரித்து வந்தது. மிக பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் குறியாக இருந்த நிறுவனம் சமீப காலமாக பட தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்து இருந்தது. மீண்டும் பட தயாரிப்பு வேளைகளில் மும்முரம் காட்ட ஆர்வம் கொண்டவர்கள் முதற்கட்டமாக தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரித்து வருகிறது.

அதே போல சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பிறகு துவங்கப்படும் படம் என்பதால் அரசியல் படம் ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டாலும், எதிர் கட்சியின் பின்னணியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் எப்படி அதை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த தயாரிப்பின் நிறுவனத்தாரின் செய்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது ரஜினி, விஜய் பற்றிய செய்திகளை அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்பது தான் அது.

இருவரின் படங்களை நிறுவனம் தயாரிப்பதால் அவர்களை பற்றிய செய்திகளை கண்ணியத்துடன் வெளியிடுவது தான் நாகரிகம், அது தான் தங்களுக்கும் நலம் என்று நிறுவனம் கருதுவதாக சொல்லப்படுகிறது. ரஜினி, விஜயின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்திகளோ கருத்துக்களோ தாங்கள் வெளியீட்டால் அது அவர்களுக்கே பாதிப்பை உண்டாக்கும் என்பதால் தான் இந்த உத்தரவு என்று சொல்லப்படுகிறது.ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை கண்டிப்பாக விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும் இருப்பினும், படம் வெளியாகும் வரை அது போன்ற விஷயங்களை தவிர்ப்பது தான் தங்களுக்கு நலம் என்று ரகசிய உத்தரவு போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்தகைய உத்தரவை தான் அலுவகத்தில் உள்ள யாரோ ஒருவர் படம் பிடித்து அனுப்பி இருக்க கூடும், அதை தான் சவுக்கு ஷங்கர் என்பவர் தனது ட்விட்டர் பதிவாக போட்டுள்ளார்.

எனவே தங்களுக்குள் ஒரு கருப்பு ஆடு இருப்பதாய் அறிந்த நிறுவனம் இனி மிக கண்டிப்பாக இருக்கும் படி செயல்பட போவதாக சொல்லப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here