லண்டனில் தமிழர் பெருமை நாட்டிய கட்டப்பா சத்யராஜ்

0
Sathyaraj Baahubali

எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிக பிரமாண்ட படம் பாகுபலி 1,2. இந்திய அளவில் பாகுபலி” படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.

பின்னர் உலகளவிலும் வசூல் சாதனையை புரிந்து பல்வேறு மொழி பேசும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் ‘பாகுபலி’ க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த நடிகர்கலுக்கு நல்ல கவனம் கிடைத்தது.இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டன் “மேடம் டுசாட்ஸ்” அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸின் பாகுபலி கதாபத்திரத்துக்கு சிலை அமைக்கும் படி கவுரவம் கிடைத்தது. பாலிவுட் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களின் சிலை அமைத்தது போல பிரபாஸுக்கும் சிலை வைத்தது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது அதே போல் தற்போது, கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது.

இந்த அங்கீகாரம், உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுத்து வருகிறது அருங்காட்சியக நிர்வாகம். எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பிரபலத்திற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சிலை நிறுவப்பட இருப்பது மிகுந்த மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த செய்தி அறிந்த தமிழ் திரையுலகினர், சத்யராஜுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் மூலம், லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படட உள்ள முதல் தமிழனின் உருவ சிலை என்ற பெருமை நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here