விரும்பிய அஜித், ஒகே சொன்ன விஜய் : இயக்குனர் அழகம் பெருமாள் சொல்லும் ஆச்சரியங்கள்

0
Azhagam Perumal with Vijaya and Ajith

இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதிக்க நினைத்து சில படங்கள் இயக்கி பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருப்பவர் அழகம் பெருமாள். சமீபத்தில் தரமணி படத்தில் பர்னபாஸ் என்ற கதாபாத்திரத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதித்தார். மணிரத்னம் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்பு டும் டும் டும் படத்திற்கு இயக்குனர் ஆகி தளபதி விஜய் நடிக்க உதயா வை இயக்கினார்.

அந்த படம் தோல்வியில் முடிய, மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து எடுத்த ஜூட் படமும் தோல்வியை தழுவ இயக்கத்திற்கு குட் பை சொல்லி விட்டு, பிறகு புதுப்பேட்டை படம் மூலம் நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்தவர். கற்றது தமிழ், ஆயிரத்தில் ஒருவன், தரமணி என்று தொடர்ந்து நடிகராக ஆகி விட்டாலும் இயக்குனர் ஆசை இன்னும் தனக்குள் இருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Udhaya

மேலும் அவர் நடிகர் விஜயுடன் உதயா படத்தில் பணியாற்றியதை பற்றி குறிப்பிடுகையில் விஜய்,இந்த படத்தில் நடிக்க சம்மதித்த முதல் முக்கிய காரணம் ஏ.ஆர். ரகுமான் இசை என்பதால் தான். அதன் பிறகு தான் படத்தில் உள்ள வலிமையான கருத்துக்கள் மிகவும் பிடித்ததாகவும் கூறி இருக்கிறார். உதயா படத்தில் விஜய் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

படம் நன்றாக வெற்றி பெற்று இருந்தால் அதன் பிறகு அவருக்கு ஒரு அக்ஷன் ஹீரோ மைலேஜ் கிடைத்து இருக்கும் என்று அப்போது சொல்லப்பட்டது. இதனால் சமீபத்தில் விஜயை சந்திக்க நேரிட்ட பொழுது பேச கூச்சப்பட்டு தான் இருந்ததாகவும் அதை புரிந்து கொண்டு அவரே இயல்பாக பேசியதாக அழகம் பெருமாள் குறிப்பிட்டார். இதனால் விஜயின் குணம் எள்ளளவும் மாறவில்லை என்று அவர் கூறுகிறார்.

அதே போன்று உதயா படத்திற்கு பிறகு தல அஜித்க்கு ஒரு கதை சொன்னதாகவும், அது மிகவும் பிடித்து போய் நடிக்க சம்மதித்தாக நினைவு கூர்ந்தார். அதற்கு பிறகு சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனாலும் தொடர்ந்து தன் மேல் நம்பிக்கை வைத்து மீண்டும் இயக்க சொல்லி அஜித் வலியுறுத்தியதாக சொல்லி அவரின் பெருந்தன்மையை பற்றி குறிப்பிட்டார்.

பெரிதாக இயக்குனராக அவர் சோபிக்கவில்லை என்றாலும் தற்போது நடிகன் ஆக அவர் இயங்கி கொண்டு இருப்பது அவருக்கு மன நிறைவை தருவதாக சொல்கிறார் அழகம் பெருமாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here