விவேகம் படம் 50 Cr நஷ்டமா?? படத்தில் ஒரு கன்றாவியும் இல்லை என்று தயாரிப்பாளர் குமுறல்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதற்கு முன் படம் குறித்து வெளியாகும் சில விஷயங்களால் ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்த்துவிடுகின்றனர்.
சமீபகாலமாக அப்படி அஜித்-விஜய் நடிகர்களின் படங்களில் அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் அஜித்தின் விவேகம்.

விவேகம் படத்தின் முதல் நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் அதிகளவில் இணையத்தில் ஒரு புறம் பரவ மற்றொரு புறம் வசூல் பற்றிய சர்ச்சைகளும் தொடர்ந்து உலவி கொண்டே இருந்தது. இது வரை இதைப்பற்றி வெளிப்படையாக தகவல்கள் வராத போதிலும் அடுத்த படத்தையும் அதே தயாரிப்பாளருக்கு அஜித் பண்ணுவதாக தெரிந்தது. விசுவாசம் படத்தை அஜித் ஒப்பு கொண்டதற்கு காரணமே விவேகம் தோல்வியை சரி கட்ட தான் என்று சொல்லப்பட்டது.இந்நிலையில், விவேகம் படத்தின் மற்றொரு பங்குதாரராக இருந்த தயாரிப்பாளர் கே.ராஜன் இது குறித்து அளித்த பேட்டியில்,
“சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான், அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம். படத்தில் ஒரு கன்றாவியும் இல்லை. படத்தில் அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் அனைவரும் இறக்கின்றனர். அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு மிக அநியாயம் , அது தான் படம் படுதோல்வியாக காரணம்!!” என்று போட்டுடைத்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் தங்களது தல அஜித்தும் இயக்குனர் சிவா இணையும் அடுத்த படத்தில் இந்த பேச்சுகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி படம் தர வேண்டும் என்று ஏங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here