விஸ்வாசம் படப்பிடிப்பு தாமதம் ஏன்?? 25 வயது தோற்றத்தில் தல!! தீபாவளி போட்டிக்கு தயார்!! #Viswasam- Exclusive Updates

0
Viswasam update

தல அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக மீண்டும் சேர்ந்ததை அடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் இந்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என சொல்லப்பட்டது சில காரணங்களால் தள்ளிப்போனது மார்ச் மாதம் வரை படத்தை பற்றி எதுவுமே தொடங்கப்பட்டதனால், தீபாவளிக்கு படம் வெளிவருமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றார் ரசிகர்கள்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது.தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் குழு ஈடுபட்டது உள்ளதால் தான் இந்த தாமதம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் மிக இளமையாக இருக்கும் போக்கில் வடிவமைக்கப்பட்டது என்று பேசப்படுகிறது.

மேலும் இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பில்லா, ஏகன் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இப்படத்தில் அஜித்துடன் சேர இருக்கிறார்.

அது போக யோகிபாபுவோடு, ரோபோ ஷங்கரும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அவர் தன் ட்விட்டர் பதிவில் மகிழிச்சியுடன் உறுதி படுத்தியுள்ளார்.

இந்த படத்தை சத்தியஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார் இமான் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here