வேலைக்காரனுக்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு என்ன??? அதற்கு அடுத்த படம் என்ன?? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

0
Sivakarthikeyan and Ponram

வரும் வெள்ளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்திற்கு பெருமளவு எதிர்பார்ப்பு கூடி இருப்பதால் சிவகார்த்திகேயனின் படங்களிலே மிகப்பெரிய வசூலை இது பெரும் என இப்போதே அடித்து சொல்கின்றனர்.

ப்ரோமோஷன்களில் அதிகளவு பணத்தை வாரி இறைக்கும் தயாரிப்பு, சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சிகளில் பெரிதும் இறங்கியிருக்கிறதாம்.

இப்படத்தை அடுத்து தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ல்கள் சமீபத்தில் வெளியாகின.

சமீபத்தில், வலைத்தளத்தில் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு சீமத்துரை என்று தகவல்கள் கசிய ஆரம்பித்தன. அந்த தலைப்பை திட்டவட்டமாக தற்போது படக்குழு இதை மறுத்துள்ளது.

படத்தின் ஷூட்டிங் தற்போது 70 % முடிந்துள்ளதாக கூறும் படக்குழு டைட்டில் இன்னும் முடிவாகவில்லை, உறுதியானதும் விரைவில் அறிவிப்போம் என்று முறையாக தெரிவித்து உள்ளனர்.

இக்கூட்டணியில் வெளியான முந்தைய இரண்டு படங்களை போலவே இதுவும் நகைச்சுவை கலந்த குடும்பப்பாங்கான படம் என்று தெரிய வந்துள்ளது.

இன்னும் பெயர் முடிவாகாததால் சிவாவின் பிறந்தநாள் ஆன ஃபிப்ரவரி 17 ல் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்க்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

வேலைக்காரன் எதிர்பார்ப்பையும் அது பெற போகும் வெற்றியையும் தாங்க கூடிய அளவும் அதை முறியடிக்கும் அளவிலும் தன் அடுத்த அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் சிவகார்த்திகேயன் இயங்கி வருவதாக தெரிகிறது.

பொன்ராம் படத்திற்கு பிறகு , இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்க்ஷன் கதையில் முதன்முதலாக சிவா இணைய இருப்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here