2.0 எந்திரனின் தொடர்ச்சி இல்லை – ஷங்கர் திட்டவட்டம்

0
2point0 rajini and Shankar

இயக்குனர் ஷங்கர் எப்பொழுதும் தன் படத்தை வெளியீட குறைந்தது இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்வார். இவரின் அனைத்து படங்களுமே கிட்ட தட்ட வருடங்கள் ஆகும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி.

இருப்பினும் சூப்பர்ஸ்டார் – அக்ஷய்குமாரை வைத்து தற்போது இயக்கிய எந்திரன் இரண்டாம் பாகம் ஆன 2Point O படம் விரைவில் ரிலீஸை எட்டியுள்ளது. இவரின் முந்தைய படங்களை விட வேகமாக அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் எஞ்சிய நிலையில் சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எந்திரன் முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். முதல் பாகத்தின் படி 2030 காலகட்டத்தில் சிட்டி ரோபோவை Dismantle செய்து பின்னர் Muesuem- இல் வைப்பது போல கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனால் விட்ட இடத்தில இருந்து இரண்டாம் பாகம் தொடரலாம் என்று அனைவராலும் கருதப்பட்டது.

அதாவது சிட்டி ரோபோவிற்கு மீண்டும் உயிர் கொடுத்து திரைக்கதை பின்னப்பட்டிருக்கலாம் என நினைத்து கொண்டு இருந்த நிலையில், அதற்கும் இதற்கும் கதாபாத்திரங்களை விட எந்த சம்பந்தமும் இல்லை என்று ஷங்கர் கூறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரிய அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. வசீகரன், சிட்டி என்ற கதாபாத்திரங்களை மட்டும் முதல் பாகத்தில் இருந்து வைத்து கொண்டு புதிய கதைக்களம் திரைக்கதை கதாபாத்திரங்கள் என்று பின்னப்பட்டிருக்கிறதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே மேக்கிங் விடீயோக்களை வெளியீட்டு ட்ரயல் பார்த்த குழு கொஞ்சம் கொஞ்சமாக படத்திற்கான எதிர்பார்ப்பையும் மார்க்கெட்டையும் கூட்டுவதற்கு திட்டம் தீட்டி வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் 15 கோடி ருபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக இம்மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here