2 Point O – பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ஏற்பாடு – சில துளிகள்

0
2 point 0 audio launch

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் வரும் 27 Oct 2017 அன்று மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது இதற்கு மட்டும் ஆன செலவு 12 கோடி என தகவல்.

இந்நிலையில் அவ்விழாவை பற்றியும் மற்ற விஷயங்களை பற்றியும் உள்ள தகவல்கள் இதோ :

    • இந்தியாவிலே ஒரு படத்திற்கான மிக பெரிய பொருட்செலவில் மிக பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
    • விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அக்ஷய்குமார் எமி ஜாக்சன் உட்பட படத்தில் பணியாற்றிய முக்கியமானவர்கள் அனைவருமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • இப்படத்தை அடுத்து ஷங்கர் கமலுடன் சேர்ந்து இந்தியன்-2 க்கு பணியாற்ற இருப்பதாலும், சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய நண்பரான உலகநாயகன் முக்கிய விருந்தினராக பங்கேற்க இருக்கலாம் என தகவல்கள் சொல்லப்படுகிறது.
    • UAE -யின் பிரதமரும் அதிபரும் ஆன ஷேக் முகமத் பின் ரஷீத் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் சொல்கிறது.UAE PM
    • படத்தின் பிரஸ் மீட் முந்தைய நாளில் புர்ஜ் அல் அரபில் நடக்க இருக்கிறது உலகத்தில் உள்ள முக்கியமான மீடியா நபர்கள் இதில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
    • சூப்பர்ஸ்டார் அக்ஷய் எமி ரஹ்மான் ஷங்கர் அனைவரும் பங்கேற்க ஹெலிகாப்டரில் புர்ஜ் ஹோட்டலிற்கு வந்து இறங்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது.
    • கிட்டத்தட்ட 10,000 நபர்களுக்கு மேல் அமரக்கூடிய பரப்பளவில் அமைந்திருக்கும் புர்ஜ் பார்க்கில் முதன்முறையாக துபாய் அரசின் அனுமதியை பெற்று இசை வெளியீட்டு விழாவை நடத்த இருக்கின்றனர். டிக்கெட் -ன் ஆரம்ப விலையே 60 ஆயிரத்துக்கும் மேல்.2 point 0 audio
    • துபாயை சுற்றி உள்ள மால்கள் மற்றும் மெட்ரோ ஸ்டேஷனில் LED ஸ்க்ரீன் மூலம் விழாவை நேரடியாக காண ஏற்பாடு செய்துள்ளார்கள். ZEE தொலைக்காட்சி மூலம் இந்தியாவிலும் நேரடி ஒளிபரப்பு ஆகலாம் என சொல்லப்படுகிறது.2 point 0 audio
    • இசைமைப்பாளர் ரகுமான் படத்தில் ஒரு பாடலுக்கு பிரத்யேகமாக 125 டெக்னீஷியன்களின் நடுவில் Live Musical Performance செய்ய இருக்கிறார்.
    • போஸ்கோ குழுவினர் படத்தின் பாடல்களுக்கும் ரஜினி, ஷங்கர், ரஹ்மான் அவர்களுக்கு Tribute பாடல்களுக்கும் நடனம் ஆட இருக்கின்றனர்.
    • படத்தில் உள்ள பாடல் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது ஹிந்தியில் அவை தயாராகவிட்டாலும் தமிழில் ஒளிபரப்ப திட்டம் இருக்கின்றனர்.

படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மெல்ல கிளப்பிவிட்டு மேலும் சில திட்டங்களை ரகசியமாக வைத்து இருக்கிறது தயாரிப்பு குழு அதை இனி வரும் நாட்களில் செய்து காட்டி அசத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here