First on Net – 2.0 – பாடல்கள் எப்படி?? – A Glimpse review even before the release!!

0
2point0 music

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், இசைப்புயல் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் 2.0 படத்தை உலகமே எதிர்பார்க்க ஆரம்பிக்கும் நாள் நெருங்கிய நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடந்து வருகிறது.

2point0இன்னும் அதிகாரபூர்வமாக இசை வெளியிடப்படாத நிலையில் பிரத்யேகமாக படத்தின் இரண்டு பாடல்களின் விமர்சனம் Kollyworld ரசிகர்களுக்காக இதோ.

  • எந்திரலோகத்து சுந்தரியே

Singers: Sid Sriram, Sasha Tripathi
Duration: 5 Min 29 Sec.

இப்பாடல் ரஜினிக்கும், எமி ஜாக்சன்னுக்கும் உண்டான Romantic number பாடல் போன்ற அமைப்பை பெற்றுள்ளது. படம் டெக்னாலஜி சம்மந்தப்பட்ட விஷயங்கள் அதிகம் கொண்டுள்ளதால் இசையிலும் பாடல் வரிகளிலும் அதன் தாக்கத்தை கூட்டி இருப்பது தெரிகிறது.

மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் வரிகளில் இசையோடு பாடல் காதில் ரீங்காரமிட்டு ஈர்க்கிறது. EDM எனப்படும் நவீன இசை கோர்வைகளை சேர்த்து இளசுகளை இப்பாடலில் கவரப்போவது நிச்சயம். பப் களில் தமிழ் பாடல்கள் ஒலிப்பது இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு இது பதில் சொல்லும், இனி ஒலிக்கும்.2point0

  • ராஜாளி நீ காலி :

Singers : Blaaze, Arjun Chandy And Sid Sriram
Duration : 4 Min 10 Sec

சிட்டி ரோபோவின் அறிமுக பாடலாக இது இருக்கும் என்றே கணிக்க படுகிறது. பட்டாசான இசையுடன் தொடங்கும் பாடல் பின் அமர்க்கள வரிகளுடன் கொண்டாட செய்கிறது. அநேகமாக கூடிய விரைவில் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக இப்பாடல் அமையக்கூடிய சர்வ லட்சணமும் கொண்டுள்ளது.

2point0வரிகள் மிகவும் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இயல்பாக இருப்பது இதன் பலம் Scifi-யுடன் மாஸை சேர்த்து வரிகளை செதுக்கி இருப்பதாக தெரிகிறது. கண்டிப்பாக ரஹ்மான் பாடல்களில் ஸ்லொ பாய்சன் வகையை சேர்ந்தது இப்பாடல் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது .

“ராஜாளி நீ காலி
இன்னிக்கு எங்களுக்கு தீபாவளி”

“ராஜாளி நீ காலி
நரகத்துக்கு நீ விருந்தாளி..”

என்பது போன்ற வரிகள் படத்தின் கதையை சுற்றி உள்ள எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் உள்ளது. “கணினி ரஜினி நீ” என்பது போன்ற வரிகள் Hashtag போட்டு Social media-வில் இப்போதே ட்ரெண்ட் ஆக தயாராக உள்ளது என சொல்லும் அளவிற்கு மதன் கார்க்கி வரிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இன்றைய தலைமுறை ரசிகர்களை அதிகம் கவரும் வகையில் தற்கால இசையில் ரஹ்மான் அமைத்து இருந்தாலும், கேட்க கேட்க அனைத்து தலைமுறையினரையும் கட்டாயம் தன் வசம் இழுப்பது தான் ரஹ்மான் மேஜிக்.

ரஹ்மான் மேஜிக், ரஜினி மேஜிக் ஓடு சேரும் பொழுது ஏற்படும் ரசாயன மாற்றத்தை நிச்சயம் செவிகளுக்குள் செலுத்தி தான் அனுபவிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here