அரசியல் படமாகும் உலக நாயகனின் “தலைவன் இருக்கிறான்”

0
Kamal Haasan's Thalaivan Irukiran

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலின் தற்போதைய நிலை பற்றி தன் கருத்துக்களை கூறி பரபரப்பு ஆக்கி கொண்டிருக்கும் வேளையில் தன் அடுத்த படமாக தலைவன் இருக்கிறான் படத்தில் மும்முரமாக இறங்கி விட்டதாக தெரிகிறது.
பேரே பல சர்ச்சைக்கு வழி வகுக்கும் வழியில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை நையாண்டி செய்து திரைக்கதையை மெருகூட்டும் செயலில் உலகநாயகன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஆமோதிக்கும் வகையில் நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் தன் படமான “பொதுவாக என் மனசு தங்கம்” என்ற படத்தின் ப்ரோமோஷன் பொழுது இத்தகவலை தெரிவித்து உள்ளார். தசாவதாரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடந்த பொழுது கமல் தலைவன் இருக்கிறான் கதையை டிக் செய்ய உதயநிதி ஸ்டாலின் அதை மறுத்ததாக சொல்லப்படுகிறது.

அதற்கு முக்கியமான காரணம், அப்படம் அரசியல் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதாலும் அதை தயாரித்தால் தங்கள் கட்சிக்கு களங்கம் விளைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைவிடப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகே மன்மதன் அம்பு படம் உருவானதாகவும் தெரிவித்து உள்ளார்.

எனவே ஏற்கனவே திட்டமிட்ட அரசியல் படம் என்றாலும் இப்பொழுது உள்ள சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு இப்படத்தில் வெளிப்படையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அரசியல் சாராத கதைகளை வைத்து கமல் படம் பண்ணிய விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற படங்களே வெளியிடுவதில் பல சிக்கலுக்கு உண்டானதால் அக்மார்க் அரசியல் படமாகும் தலைவன் இருக்கிறான் தொடங்கும் நொடியில் இருந்தே பிரச்சனைகளை சந்திக்கும் வேளை வரும் என்று திரை வட்டாரம் பேசி கொள்கிறது.

தடைகளை வென்றே சரித்திரம் படைத்த உலகநாயகன் இதை கையாள்வதை கூடிய விரைவில் அறிந்து கொள்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here