நிறைவேறிய மக்கள் செல்வனின் நீண்ட நாள் கனவு

0
Vijay sethupathi news BMW 7 series
Credit: Manoramma Online

நடிகர் விஜய்சேதுபதி நடிகர் மாதவனோடு இணைந்து நடித்து சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு கொண்டிருக்கும் படம் விக்ரம் வேதா. படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக திரைக்கதை, கதை சொல்லப்பட்ட விதம், மாதவனின் ஆளுமை, மற்ற நடிகர்களின் கச்சிதமான பாத்திர படைப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும் விஜய் சேதுபதியின் அசால்ட் ஆன நடிப்பும், கம்பீர தோற்றமும் படத்தை சில படிகள் தூக்கி நிறுத்தி செய்தது என்பது தான் நிதர்சனம்.

தன் நடிப்பின் மூலமும் திரைக்கு வெளியே ரசிகர்களை எளிமையாக அணுகும் முறையிலும் மக்கள் மனதில் மக்கள் செல்வன் ஆக மிளிரும் இவர் தனது நீண்ட கால ஆசையான சொகுசு காரை தற்போது வாங்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கணக்கு வழக்குகள் பார்த்து பின் சினிமாவில் ஒரு இடம் கிடைக்க போராடி இந்நிலைக்கு வந்துள்ள இவர் பெரிதாக சொகுசு கார் எதுவும் வாங்கியதில்லை.

ஆடம்பரங்களை தவிர்த்து எளிமையை விரும்பும் இவர் தற்போது பி எம் டபுள்யு சீரிஸ் 7 – சொகுசு காரை வாங்கியுள்ளார் தன் நீண்ட நாள் கனவை இதன் மூலம் நிறைவேற்றி கொண்டவர், தன் நண்பர்கள் உடன் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன் திரை உலக நண்பர்கள் ஆன சூது கவ்வும் ரமேஷ் திலக், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ராஜ்குமார் போன்றவர்கள் உடன் தன் ஆசையை நிறைவேற்றி கொண்டு இருக்கும் இந்நேரத்தில் மக்கள் செல்வனுக்கு அகமகிழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here