ரஜினியை பின்னுக்கு தள்ளி விஜய்க்கு போட்டியான சீமராஜா சிவகார்த்திகேயன்??

0
739

நாளுக்கு நாள் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டே இருக்கிறது. ரெமோ, ரஜினிமுருகன் படங்கள் மூலம் வசூல் சாதனை செய்த சிவா மீண்டும் கடந்த வெள்ளி அன்று வெளியான சீமராஜா படம் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

படம் சக்கைபோடு போடுவதாக தயாரிப்பாளர் தரப்பே உறுதி பட சொல்லியது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் இந்த ஆண்டு மிக பெரிய ஓப்பனிங் என்று ரெகார்ட செய்துள்ளது. பெரியநடிகர்கள் ரஜினி, சூர்யா வை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் சீமராஜா முதல்நாளே 13.50 கோடி தமிழ்நாட்டில் கல்லா கட்டியதாக சொல்லப்படுகிறது. இத்தகவலை ஆன்லைன் ட்ராக்கர் ஆன மனோபாலா விஜயபாலன் என்பவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் முதல் நாள் வசூல் ஆன சூப்பர்ஸ்டாரின் காலவையே சீமராஜா முந்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இதனால் மெர்சல் படம் மூலம் மிகப்பெரிய சாதனை இடத்தில் இருக்கும் விஜய்க்கு போட்டியாளராக சிவகார்த்திகேயன் உருவெடுத்து உள்ளதாக திரையுலகம் பேசி கொள்கிறது.

சிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் :

  • சீமராஜா- ரூ. 9.80 கோடி
  • வேலைக்காரன்- ரூ. 7.40 கோடி
  • ரெமோ- ரூ. 6.50 கோடி
  • ரஜினி முருகன்- ரூ. 4.95 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here