வெற்றியின் நாயகன் விஜய், தொடர் தோல்வி அஜித் : முன்னணி பத்திரிகையின் உச்சகட்ட விமர்சனம் :

0
172

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உயர்ந்து கொண்டு இருக்கும் விஜய் ,அஜித் இருவருக்கும் பெரிய அளவில் ரசிக கூட்டம் இருந்தாலும் இணையத்தில் குறிப்பாக இரு தரப்பினரும் போர் புரிவது போல் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பு காட்டி வருகின்றனர்.

இதற்கு தூபம் போடுவது போல் பிரபல முன்னணி பத்திரிகையும் விஜய் அஜித் இருவரின் சாதனைகளை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். அதில் விஜய்யின் மொக்க படங்களின் வசூலை கூட அஜித் நெருங்க முடியவில்லை என்றும் தொடர் தோல்வி கொடுத்தும் விஜய்க்கு நிகராக அஜித் தன்னை காட்டி கொள்வதும் சம்பளம் வாங்குவதுமாக எழுதி உள்ளனர்.

மேலும் அஜித் படங்கள் கடந்த எட்டு வருடங்களில் 4 படங்கள் தான் லாபம் என்றும் மீதி அனைத்தும் தோல்வி என்றும் விமர்சித்து இருக்கிறது. இதனால் ஆத்திரப்பட்டு அஜித் ரசிகர்கள் அந்த பிரபல பத்திரிகையை திட்டி தீர்த்து வருகின்றார். விஜய் ரசிகர்களோ இந்த செய்தியை கேள்வி பட்டு மகிழ்ச்சி அடைந்து அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

இதை அறிந்து அஜித் தரப்பில் விசாரித்த பொழுது, அஜித் எந்த ஒரு பத்திரிகையிலும் பேட்டி குடுப்பது இல்லை அதன் காரணமாகவே காழ்புணர்ச்சியில் சில பத்திரிகைகள் செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ ஊரு ஒன்று பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் தானே

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here