அதிகாரபூர்வ சர்க்கார் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்

0
540

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சர்க்கார் திரைப்படம் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் படம். போஸ்டர் வெளியான நாளில் இருந்து படத்தை பற்றிய அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!!!

தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்க்கார் படத்தை பற்றிய அப் டேட்களை சில நிமிடங்களுக்கு முன் பதிவிட்டது. அதாவது வரும் புதன் (19/09/2018) அன்று படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ரசிகர்களை குஷி படுத்தவே இப்படி ஒரு அறிவிப்பு.

சர்க்காரின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டுக்கான தேதியை தான் அன்று அறிவிக்க உள்ளதாக சன் தரப்பில் சொல்லப்படுகிறது இசை வெளியீட்டு விழா அக்டொபேர் -2 தேதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அழைக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருப்பதால் இனி வர போகும் ஒவ்வொரு நாளும் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி தான் என்று வட்டாரங்களில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here