விஜய்சேதுபதிக்கு செருப்படி கொடுத்த ரசிகர்கள்: காரணம் என்ன ??

0
2061

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசும் வெளிப்படைத்தன்மையாலே ரசிகர்களிடம் பேரன்பு பெற்றவர். இவரின் இந்த குணமும், விடாமுயற்சியும் தான் இவரை தொடர்ந்து நிலைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. பல படங்களில் நேரம் இல்லாமல் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்தாலும் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று தீராத தாகம் அவருக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதன் பிரதிபலிப்பாகவே மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தயாரித்து பல பிரச்சனைகளை கடந்தும் சமீபத்தில் வெளியாக செய்து இருக்கிறார். மக்கள் இடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றபொழுது அதன் வெற்றி தன்னை சாராதது என்று மிகவும் பணிவுடன் சமீபத்தில் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் மேல் வைத்தே படத்தை தயாரித்ததாகவும் படம் பார்த்த பிறகு பெரிதாக விரும்பவிலை என்றும் கூறி இருக்கிறார். அதன் பிறகு மக்களிடம் கிடைத்த வரவேற்பு, தனது ரசனைக்கு மிகப்பெரிய செருப்படியாகவும் இவர் கருதுவதாகவும் அப்பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன தான் பெருந்தன்மை என்றாலும் இப்படியா பேசுவது என்று ரசிகர்களும் திரை உலகினரும் நினைத்தாலும், இவரின் வெளிப்படையான இந்த பேச்சு அவரின் வெள்ளை மனதையே காட்டுகிறது என்று பேசப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here