ரஜினி ரசிகரை அடித்து நொறுக்கிய பா.ஜ.க: அப்போ அரசியல் கூட்டணி கிடையாதா ??

0
419
BJP workers slams Auto driver

பா.ஜ.க மீதான வெறுப்புணர்ச்சி சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பா ஜ க காலூன்றவே கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கும் ஒரு மனநிலை மக்களியிடையே பரவலாக பரவுகிறது. இதற்கு மற்ற கட்சியினரின் பிரச்சாரம் ஒரு புறம் இருந்தாலும் சொந்த கட்சியிலே சிலர் பெரும் சொதப்பல் செய்வது அவர்களுக்கே வினை ஆகி விடுகிறது.

பா.ஜ.தேசிய செயலர் எச். ராஜா உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் வறுத்தெடுத்து சமீபத்தில் வாங்கி கட்டி கொண்டார். இதே போல் சோபியா விவகாரத்தில் தமிழிசையும் வறுத்தெடுக்கப்பட்டார். அது முடிந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் நேற்று ஒரு ஆட்டோ ட்ரைவரை தமிழிசை இருக்கும் இடத்திலே கட்சிக்காரர்கள் தாக்கி உள்ளனர்.

அதற்கு காரணம் தமிழிசை மீடியாவுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பெட்ரோல் விலை உயர்வை பற்றி அவர் எழுப்பிய கேள்வி தான்!! உடனே கட்சியில் உள்ள நிர்வாகி அந்த கேள்வி எழுப்பிய நபரை அடித்து பின்னுக்கு தள்ளி வன்முறையில் ஈடுபட்டு அந்த இடத்தை விட்டு போக செய்த காட்சி ஊடங்களில் பதிவு ஆகின. இவர்களுக்கு எதிராக கேள்வி கேட்டால் இது தான் நடக்கும் என்ற வகையில் மக்கள் அச்ச படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அந்த கேள்வி கேட்ட அந்த ஆட்டோ ட்ரைவர் ஒரு ரஜினி ரசிகர் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே ரஜினியை பி.ஜே.பி தான் இயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. இதனை அவர் பொதுவெளியில் பகிரங்கமாக மறுத்தாலும் பிற கட்சியினரும் ஊடங்கங்களும் இருவரும் வேறல்ல என்று சொல்கின்றனர்.

இந்நிலையில் ரஜினி ரசிகரை தாக்கியதால் ரசிகர்கள் கோபத்திற்கும் உள்ளானது   பா.ஜ.க. எனவே ரசிகர்கள் எண்ணத்திற்கு ஏற்ப ரஜினி பா.ஜ.கவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பர் என்று எண்ணப்படுகிறது. அப்படி ஒன்று நடக்கையில் இருவரின் கூட்டணி என்பது உறுதி செய்யப்படாத நிலை உருவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here