“என் அண்ணன் கையில் கிடைத்தால் அவனை கொன்றுவிடுவேன்” : தனுஷ் படம் குறித்து கெளதம் மேனன் கூறிய திடுக்கிடும் தகவல்

0
1816
Gautham Vasudev Menon

இயக்குனர் கெளதம் மேனன் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் “அச்சம் என்பது மடமையடா” இதையடுத்து தனுஷுடன் “என்னை நோக்கி பாயும் தோட்டா”, விக்ரமுடன் “துருவ நட்சத்திரம்” சிம்புவுடன் பெயரிடாத படம் என்று தொடர்ந்து இயங்கி வந்தாலும் ஒரு படமும் வெளி வரவில்லை.

இருப்பினும் இப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்திய விழாவில் பங்கேற்ற அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா கதை உருவானதை பற்றிய ருசிகர தகவல்களை வெளியுட்டுள்ளார். அதாவது அக்கதை குறித்து கௌதம் பேசுகையில், “முதலில் என் அண்ணன் கையில் கிடைத்தால் அவன் செத்துடுவான் அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று தான் எழுத ஆரம்பித்தேன். இதை நான் எதற்காக எழுதினேன் என்று தெரியாது ஆனால் இதை வைத்து தான் இக்கதையை டெவெலப் செய்ய தொடங்கினேன் கூடிய விரைவில் படம் திரைக்கும் வரும்” என்று கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறுவதை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா அண்ணன்- தம்பி இடையே நடக்கும் யுத்தம் என்று தெரிகிறது. மேலும் தம்பியாக தனுஷும் அண்ணனாக சசிகுமார் நடித்து இருப்பதாக உறுதி பட தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here