பழைய மூஞ்சி ரஜினி : விளாசிய சர்க்கார் வில்லன் ராதாரவி

0
211
Radha Ravi Slams Rajini

45 வருடங்கள் கடந்தும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் இருந்து வர தான் செய்கிறது. இருப்பினும் இவரின் அரசியல் பிரவேசத்தால், சில கருத்துக்களால் எதிர்ப்புகளை சமீபத்தில் சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில் பழைய வில்லன் நடிகரும், தளபதி விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் வில்லனாகவும் நடித்து வரும் ராதாரவி ரஜினியை விமர்சித்து ஒரு விழாவில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது கபாலி படத்தில் நடிக்க ராதாரவியை தயாரிப்பாளர் தாணு அணுகி, சிறிய ரோல் என்பதால் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் இருக்கும் என தெரிவித்தாராம்.

அதற்கு ராதாரவி,  “ரஜினி படத்திலெல்லாம் நான் ஒரேயொரு நாள் மட்டும் நடிச்சதே இல்லியே” என கூறினாராம். பின்னர் ரஞ்சித்திடம் இருந்து பதிலே வரவில்லையாம். சில நாட்கள் கழித்து இது குறித்து விசாரித்ததற்கு தயாரிப்பாளர் தாணு, “டைரக்டர் ரஞ்சித் பழைய முகம் வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று பதிலளித்தாராம்.இதை கூறிய ராதாரவி. “அப்படி பார்த்தால் தமிழ் சினிமாவில் ரஜினியின் முகம் தான் ரொம்ப பழைய முகம்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

ராதாரவி திமுக, அதிமுக என்று கட்சி மாறி கொண்டிருந்தவர் தற்போது திமுகவில் இணைந்து ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தான் நல்ல நண்பராகிய அவரை தொடர்ந்து விமர்சித்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here