சாதனை மேல் சாதனை : சர்வதேச அளவில் சிறந்த நடிகரான தளபதி விஜய்

0
332
Mersal reaches new heights

இந்திய அளவில் சாதனையும் மகுடமும் பெற்ற தளபதி விஜய்க்கும் மெர்சல் படத்திற்கும் மற்றொரு கவுரவம். சர்வேதச அளவில் உலக சினிமாக்களுக்கு அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் கமிட்டி அதில் உலகில் உள்ள நூற்றுக்கும் மேலான மொழி படங்களில் கலந்து கொண்டதில் மெர்சல் படமும் ஒன்று.

விழாவின் கமிட்டி மெம்பர்களும் மக்களும் சேர்ந்து சிறந்த நடிகர் கலைஞர்களுக்கு வோட்டு அளித்து விருது தரும் இந்நிகழ்வு பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இவ்விருது பட்டியலை நேற்றிலிருந்து வெளியிட தொடங்கினர். தளபதி விஜய் பெயரை நாமினேட் செய்ததே பெருமையான விஷயம் என்று கருதப்பட்ட நிலையில் அவர் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார். இந்திய அளவில் அதுவும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக கமலுக்கு கூட கிடைக்காத விருது விஜயின் சிறப்பான நடிப்பிற்கு கிடைத்திருப்பது.

உலக அரங்கில் தமிழ் சினிமாவை பெருமை பட வைத்திருக்கிறது தொடர்ந்து செல்வாக்கையும் சாதனையும் பெற்று வரும் விஜய் மென்மேலும் சாதனைகள் படைத்து தான் என்றுமே அசைக்க முடியாத தளபதி தான் என்று மீண்டும் நிரூபித்து வருகிறார்.

இதனால் அவரின் ஒவ்வொரு ரசிகனும் ஆளப்போறான் தமிழன் பாடலை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க செய்து பரவசமடைகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here