“விஜய் சேதுபதியா இருந்தாலும் எனக்கென்ன??” எக்காளமிட்ட சூரி, கோபத்தில் ரசிகர்கள்

0
183
Soori on Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தனம் இல்லாததால் வேறு வழியின்றி முன்னணி காமெடியன் ஆன சூரி பல படங்களில் நடித்து வருகிறார். அதுவும் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஹரி படங்களில் தவறாமல் ஆஜராகி விடுகிறார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி-2 படத்தில் இவர் காமெடியன் ஆக நடித்து இருந்தார்.

பெரிய அளவு இவரது காமெடி ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் இவரின் ஒரு குறிப்பிட்ட வசனம் விஜய்சேதுபதி ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது. அந்த வசனம் இது தான்.

“ஓணாபதியா இருந்தா என்ன அம்பிகாபதியா இருந்தா என்ன… ஏன் விஜய் சேதுபதியா இருந்தா என்ன… இன்னைக்கு விடமாட்டேன்”

என்ற வகையில் சூரி பேசிய வசனம் தான் ரசிகர்களை சூடேற்றிய ஒன்று.

இதனால் அவரது ரசிகர்கள் போர்க்கொடிதூக்கியுள்ளனர். சூரியை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here