ஜெய் எனக்கு தான்: கேத்தரின் தெரசா அதிரடி

0
151

நடிகை கேத்தரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். “நீ தான் வேணும் என்னை கட்டிக்கிறீயா?” என்று கார்த்தியை பார்த்து அவர் கேட்ட வசனம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பெற்று தந்தது.

அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் அமையாவிட்டாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று நடித்து கொண்டு தான் இருக்கிறார். நடிகர் ஜெய் Neeya -2 , ரீமேக்கில் நடிக்க அவருடன் வரலட்சுமி, லட்சுமி ராய் இருந்தாலும் கேத்தரின் தெரசாவோ நான் தான் ஜெய்யுக்கு ஜோடி என்ற வகையில் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது , “மூன்று ஹீரோயினிகள் படத்தில் இருந்தாலும் நான் தான் ஜோடி ஜெய் எனக்கு தான்” என்று கூறி இருக்கிறார்.

இப்படி அவர் உரிமையோடு சொல்வதால் அவருக்கும் ஜெயிக்கும் காதல் மலருகிறதோ என்று கிசுகிசுக்கின்றனர். ஏற்கனவே அஞ்சலியுடனான காதல் முறிந்ததால் இது பத்திக்கும் வாய்ப்பு உள்ளது என்பது கோலிவுட்டின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here